Shrikant Sahasrabuddhe என்ற முன்னாள் வங்கி ஊழியர், தன்னுடைய ஓய்வூதிய சேமிப்பில் இருந்து 25 லட்சத்தை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் ஊழியரான அவர், தனது மனைவியுடன் ஓய்வுக்கு பிறகு உலகம் முழுவதும் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறினார். ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி உயிரிழந்ததால் அந்த கனவு நிறைவேறாமல் போய்விட்டது.