இன்றுமுதல் ரயில் பயண கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய கட்டண உயர்வு, கடந்த ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த ஜூலை மாதம் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், அதன்மூலம் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது.