உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும், ஒரு புதிய முயற்சி, சீனாவில் நடந்துள்ளது. அணு தாக்குதல்களையும் தாங்கி நிற்கக்கூடிய, உலகின் முதல் செயற்கை மிதக்கும் தீவு, சீனாவில் உருவாகிக் கொண்டிருக்கிறது. 78,000 டன் எடையுள்ள, இந்த மாபெரும் தீவு, சீனாவின் புஜியான் விமானக் கப்பலுக்கு சமமான அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.