‘ஓபன் ஏஐ’ நிறுவனம் தனது பிரத்யேக ‘சாட்ஜிபிடி கோ’ சந்தா சேவையை இந்திய பயனா்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள யாவரும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி, பிரீமியம் சாட்ஜிபிடி அம்சங்களை இலவசமாக அனுபவித்துக் கொள்ளலாம். இந்தச் சலுகையானது ஏற்கனவே இருக்கும் பயனர்களுக்கும், புதிய பயனர்களுக்கும் செல்லுபடியாகும். ஆனால், இந்த இலவச சந்தாவை பெற நீங்கள் முன்னதாகவே செல்லுபடியாகும் கட்டண முறையான உங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது யூபிஐ-ஐ விவரங்களை அளிக்க வேண்டியது அவசியமாகும்.