பொதுவாக வங்கியில் பணம் சேமித்தால் வட்டி கிடைக்கும் என்று நாமெல்லாம் நினைப்போம். ஆனால் ஐரோப்பா மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள சில வங்கிகளில் நிலைமையே வேறு. அங்கு பணம் சேமித்தால் நமக்கு வட்டி கிடைக்காது. மேலும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக வங்கிக்கு நாம் பணம் செலுத்த வேண்டும். இதைத்தான் நெகட்டிவ் இன்ட்ரஸ்ட் என்று அழைக்கிறார்கள்.