ஆபரேஷன் சிந்துர் வெற்றிக்குப் பிறகு, இந்தியாவின் பெருமைமிகு பிரமோஸ் ஏவுகணை, உலகளவில் பெரும் புகழை பெற்றிருக்கிறது. இந்த அதிவேக ஏவுகணை, ஒலியின் வேகத்தைவிட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும். இதன் அடிப்படை தூரம் 290 கிலோமீட்டர், ஆனால் தற்போது புதிய மாடல்களில், இது 500 அல்லது 800 கிலோமீட்டர் வரை சென்றடைகிறது. ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையில், பிரமோஸ் ஏவுகணை முக்கிய பங்கு வகித்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் பாகிஸ்தானுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் இந்தியா தரும் தெளிவான எச்சரிக்கையாக இருந்தது