பீகார் மாநிலம், பூர்னியாவை சேர்ந்தவர் முர்ஷித் ஆலம். இவர், 18 நாட்கள் மேற்கொண்ட கடின உழைப்பின் பயனாக ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 100 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய மின்சார ஜீப்பை உருவாக்கியுள்ளார். முர்ஷித் ஆலம் தனியாக மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கடையில் சிறப்பாக செயல்பட தொடங்கியது. இந்த நிலையில், முர்ஷித் ஆலமுக்கு ஒரு யோசனை தோன்றியது.