மலையாள பிக் பாஸ் சீசன் 7 ஆனது, கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற்ற மிகப்பெரிய கிரான்ட் ஃபினாலேவுடன் நிறைவடைந்தது. இதன் ஒளிபரப்பு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு வந்த டிஆர்பி அறிக்கையில், இந்நிகழ்ச்சி வியக்க வைக்கும் அளவில் பார்வையாளர்களை ஈர்த்தது தெரியவந்துள்ளது. அறிக்கைகளின் படி, பிக் பாஸ் மலையாளம் சீசன் 7ன் டிஆர்பி 22 டிவிஆர் என பதிவாகியிருக்கிறது. இது இதுவரை மலையாளத்தில் வந்த அனைத்து சீசன்களை காட்டிலும் மிகச் சிறந்த சாதனையாகும். மொத்த சீசனும் சராசரியாக 12.5 டிவிஆர் பெற்று, ஆறு பில்லியன் ஊடக இம்ப்ரஷன்களை பெற்றுள்ளது