பெங்களூருவில் டவுன் பகுதியில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூபாய் 30 லட்சம் பாதுகாப்புத் தொகை கோரப்பட்டதாக ஒரு பயனர் பகிர்ந்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் நாளுக்கு நாள் வீட்டு வாடகை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது ரெடிட் தளத்தில் ஒரு பயனர் இதை குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு மாதம் ரூபாய் 20 ஆயிரம் வாடகையும், ரூபாய் 30 லட்சம் அட்வான்ஸ் தொகையாகவும் கோரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.