அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி, காவிக்கொடி கொடியேற்றினார். ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இந்த காவிக்கொடியை ஏற்றி அவர் உரையாற்றினார். முதலில், சப்தமந்திருக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், மகரிஷி வால்மீகி, தேவி அஹல்யா, நிஷாத்ராஜ் குஹா மற்றும் மாதா ஷபரி ஆகியோரின் கோயில்களிலும் தரிசனம் செய்தார். தொடர்ந்து, மாதா அன்னபூர்ணா கோயிலுக்கும் சென்ற அவர், பிறகு ராம் தர்பார் கருவறையில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.