காதலனால் ஏமாற்றப்பட்டு உறைந்துபோன நிலையில், உயிரிழந்த பெண்ணின் மறைவிற்கு உலகம் முழுவதும் இருந்து இரங்கல்கள் குவிந்து வருகின்றன. மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு, பனியில் உறைந்து உயிரிழந்த பெண் ஆஸ்திரியாவைச் சேர்ந்த 33 வயதான கெர்ஸ்டின் கர்ட்னர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.