Bigg Boss 17 போட்டியாளர் மற்றும் யூடியூபர் அனுராக் டோபால் சனிக்கிழமை இரவு டெல்லி மீரட் எக்ஸ்பிரஸ் வேயில் கார் விபத்தில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஓட்டிய Toyota Fortuner கார் தஸ்னா அருகே கட்டுப்பாட்டை இழந்து மத்திய தடுப்பில் மோதி பலமுறை புரண்டது. இந்த விபத்து நடந்த நேரத்தில் அனுராக் டோபால் Instagram நேரலையில் இருந்தார். 80,000க்கும் மேற்பட்டோர் அந்த நேரலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.