எஸ்எஸ் ராஜமவுலியின் பிரம்மாண்டமான ‘வாரணாசி’ படத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா மீண்டும் இந்தியத் திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். இந்த சூழலில், வாரணாசியின் கதாநாயகனான மகேஷ்பாபுவின் குடும்பத்தினருடன் பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சியான நேரத்தை கழித்துள்ளார். எஸ்எஸ் ராஜமவுலியின் மகன் எஸ்எஸ் கார்த்திகேயாவின் பிறந்த நாளில், மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் பிரியங்கா சோப்ரா, அவரது தாயார் மது சோப்ரா, மகேஷ்பாபுவின் மனைவியான நம்ரதா சிரோத்கர், மகள் சித்தாரா மற்றும் எஸ்எஸ் ராஜமவுலியின் மகன் எஸ்எஸ் கார்த்திகேயா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.