சத்தீஸ்கர் மாநிலத்தின், அம்பிகாபூர் நகரைச் சேர்ந்த குடும்பம், மனிதநேயம் நிறைந்த ஒரு அழகான செய்தியை சமூகத்துக்கு வழங்கியுள்ளது. அப்படி அந்த குடும்பத்தினர், என்ன செய்தார்கள் தெரியுமா? தங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்தியுள்ளனர். இந்த திருமணம், பால்தேவ் பிரசாத் சோனி மற்றும் அவரது மனைவி பெச்சினி தேவி ஆகியோரின், 65 ஆம் ஆண்டு திருமண நாளை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்டது.