இரவு நேரங்களில் பூமியின் வளிமண்டலத்தின் மீது தோன்றும் சிவப்பு ‘ஜெல்லிஃபிஷ்’ போன்ற ஒளி வடிவங்கள் மற்றும் இதர விசித்திரமான விளக்குகள் பல நேரங்களில் அந்நிய கிரகவாசிகளின் இருப்பாக தவறாக கருதப்பட்டுள்ளன. இத்தகைய நிகழ்வுகள் குறித்து உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் விவாதங்கள் நடைபெற்றன. ஆனால், இந்த மர்மமான சிவப்பு ஒளிகளுக்குப் பின்னால் என்ன உண்மை இருக்கிறது என்பதை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.