டெல்லியிலிருந்து கோவாவுக்கு சென்ற விமானத்தில் கழிப்பறைக்குள் பீடி புகைத்ததாக ஒரு பயணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில், டெல்லியைச் சேர்ந்த ஆஷிஷ் என்ற பயணி Akasa Air விமானத்தில் பயணம் செய்தபோது விமானத்தின் கழிப்பறையில் பீடி புகைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் லைட்டர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.