தான் விஜய்க்கு எதிராக உள்ளதாக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களை சந்திப்பது என்பதே அறிதான காரியம், அப்படியிருக்க சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு அஜித் குமார் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், கரூர் துயரச் சம்பவம் குறித்தும் பற்றி பேசியிருந்தார். இந்நிலையில், அதில் அவர் விஜய் குறித்து தவறாக பேசியது போன்று சமூக வலைதளங்களில் சிலர் பரப்பினர். இந்நிலையில், இதற்கு பதிலளித்த அஜித்குமார், கரூர் துயர சம்பவம் தொடர்பாக நான் அளித்த பேட்டியானது, ஒருசிலரால் அவர்களது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், சிலர் அஜித் - விஜய் இடையிலான மோதல்போல ஆக்கிவிட்டனர் என்றும் வேதனை கூறியுள்ளார். மேலும், தனது பேட்டிகளை விஜய்க்கு எதிராக சித்தரிப்பவர்கள், அமைதியாக இருப்பது நல்லது என்றும் கூறியுள்ளார்.