லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து அஜித்குமார் தற்போது கார் ரேஸ் மற்றும் அவருக்கு பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து, அஜித்தின் 64-வது படத்தையும் 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் குடும்பத்துடன் கொண்டாடும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். விரைவில் படத்திற்கான சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் 65 ஆவது படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் இன்று பரபரப்பை ஏற்படுத்தின.