ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பில், கோகுலம் கோபாலன் தயாரிக்கும் மோகன்லால் நடிக்கும் புதிய படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக ‘L367’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கத்தை விஷ்ணு மோஹன் மேற்கொள்கிறார். தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் விஷ்ணு மோஹன் என்பது குறிப்பிடத்தக்கது.