தெருநாய் ஒன்று, தன் காயமடைந்த காலை தூக்கியபடியே, சிகிச்சைக்காக ஒரு விலங்கு நல மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பிரேசில் நாட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. தனியார் மருத்துவமனையில், நடந்த இந்த சம்பவம், சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.