ஒரு எளிய கண் பரிசோதனை, உங்கள் இதய நோய் ஆபத்தையும், கூடவே உங்கள் உடல் எவ்வளவு வேகமாக வயதாகிறது என்பதையும், கண்டறிய முடியும் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. இது இங்கிலாந்து மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில், இந்த உண்மை வெளியாகியுள்ளது. நமது கண்களின் பின்புறத்தில் உள்ள சிறிய ரத்தக் குழாய்கள், நமது உடல் முழுவதும் உள்ள ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கின்றன. அதாவது, கண்களில் உள்ள ரத்தக் குழாய்களின் மாற்றங்கள் இதயநோய், ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகளுக்கு அறிகுறிகளாக அமையக்கூடும்.