இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளை, கொடூரமாக தாக்கிய சென்யார் மற்றும் தித்வா ஆகிய இரட்டை புயல்களால், உயிரிழப்பு எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையை தாக்கிய தித்வா புயலால், 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்த புயல் காற்று, வீடுகள், சாலைகள், பாலங்கள் என அனைத்தையும் சேதப்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயர செய்திருக்கிறது.