2026 இருபது ஓவர் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா, தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி, பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை மற்றும் இலங்கையில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.