 <urlset xmlns="http://www.sitemaps.org/schemas/sitemap/0.9" xmlns:image="http://www.google.com/schemas/sitemap-image/1.1" xmlns:video="http://www.google.com/schemas/sitemap-video/1.1"><url><loc>https://www.tv9tamilnews.com/videos/premalatha-vijayakanth-inspects-adi-dravidar-students-hostel-in-virudhachalam-107672.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/pvi.png</video:thumbnail_loc>


			<video:title>விருத்தாச்சலத்தில் மாணவர் விடுதி, தீயணைப்பு நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆய்வு..</video:title>
		
			<video:description>விருத்தாச்சலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாலை ஆறடி சாலையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்கள் உணவு போதுமான அளவில் வழங்கப்படவில்லை, கழிப்பிட வசதி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மின்விளக்கு வசதி இல்லை என்றும், விடுதி கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளதால் அவற்றை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.  தொடர்ந்து, மாணவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும் சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களையும் பிரேமலதா ஆய்வு செய்தார். இதையடுத்து, கடலூர் சாலையில் உள்ள தீயணைப்புத் துறை அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர், விருத்தாசலம்-கடலூர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் தனது நடவடிக்கையால் அமைக்கப்பட்ட சோலார் மின்விளக்குகளை ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளிடம் அதன் பயன் குறித்து கேட்டறிந்தார்.</video:description> 	<video:publication_date>2026-09-25T14:42:24+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/GQV8Dyfl-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/thoothukudi-medical-college-hospital-fully-prepared-for-dengue-management-medical-superintendent-107577.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/dengue-.png</video:thumbnail_loc>


			<video:title>அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள்..</video:title>
		
			<video:description>தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக பெரியவர்களுக்கு 60 படுக்கைகள், குழந்தைகளுக்கு 40 படுக்கைகள் என தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். பத்மநாபன் தெரிவித்துள்ளார். டெங்கு நோயாளிகளுக்கு தேவையான ஐ.வி. திரவங்கள், மருந்துகள், ரத்தம் மற்றும் பிளாஸ்மா உள்ளிட்டவை போதுமான அளவில் இருப்பதாகவும் அவர் கூறினார். அதிக காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஏற்பட்டால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், குறிப்பாக NSAID வகை வலி நிவாரணிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.  டெங்கு நோயின் முக்கியமான கட்டத்தில் கடுமையான வயிற்றுவலி, வாந்தி, உடல் சோர்வு மற்றும் ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என தெரிவித்தார். மேலும், ஏடிஸ் கொசுக்கள் தேங்கியுள்ள சுத்தமான நீரில் உற்பத்தியாகும் என்பதால், வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தற்போது மருத்துவமனையில் ஓரிரு டெங்கு நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.</video:description> 	<video:publication_date>2026-09-25T08:07:15+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/iCc06LRH-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/youths-fail-to-steal-chicken-coop-flee-with-two-chickens-in-coimbatore-cctv-goes-viral-107362.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/chicken-.png</video:thumbnail_loc>


			<video:title>கோழிக்கூண்டை திருட முடியாமல் 2 கோழிகளுடன் தப்பிய வாலிபர்கள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்..</video:title>
		
			<video:description>கோவையில் கோழிக்கூண்டை திருட முயன்று முடியாததால், 2 பிராய்லர் கோழிகளை மட்டும் திருடிச் சென்ற வாலிபர்களின் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கோவை ராமநாதபுரம் பகுதியில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள், பிராய்லர் கோழிக்கடையின் முன் வைக்கப்பட்டிருந்த பெரிய இரும்புக் கூண்டை தூக்கிச் செல்ல முயன்றுள்ளனர். கூண்டு அதிக எடையுடன் இருந்ததால் அதைத் தூக்க முடியாமல் கைவிட்டனர்.  இதையடுத்து அருகில் இருந்த மற்றொரு கோழிக்கடைக்குச் சென்ற அவர்கள், கூண்டுக்குள் இருந்த 2 கோழிகளை மட்டும் திருடி இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். கடை உரிமையாளர்கள் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த சம்பவம் தெரியவந்தது.</video:description> 	<video:publication_date>2026-09-24T07:11:09+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/PTj6O18t-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/poompuhar-launches-navratri-golu-doll-exhibition-with-new-vijay-idol-107323.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/golu-poo.png</video:thumbnail_loc>


			<video:title>பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சி தொடக்கம்</video:title>
		
			<video:description>சேலம் திருவள்ளுவர் சிலை அருகே உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது. இதனை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சி அடுத்த மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  கண்காட்சியில் 18 சித்தர்கள் செட், கிரிவலம், சோளிங்கர், திருநாவுக்கரசர், பஞ்சஸ்தலம், மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு வகையான கொலு பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அப்துல் கலாம், திருவள்ளுவர், விவேகானந்தர் மற்றும் முதல்வர் விஜய் உருவம் பதித்த பொம்மைகளும் புதிய வரவாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.  ராம்செட், குபேரன் செட், கும்பகோணம் செட், ஆழ்வார் செட், பழக்கடை, காய்கறி கடை உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட வகையான பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. ரூ.15 முதல் ரூ.32,500 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக மேலாளர் நரேந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.</video:description> 	<video:publication_date>2026-09-24T11:13:02+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/SlrcziIc-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/sathis-s">Sathis S</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/a-video-showing-an-employee-of-the-motor-vehicle-inspectors-office-in-thuraiyur-trichy-district-accepting-a-bribe-is-going-viral-on-social-media-107320.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/bri.png</video:thumbnail_loc>


			<video:title>துறையூர் மோட்டார் வாகன அலுவலக ஊழியர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்</video:title>
		
			<video:description>திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாமக்கல் மாவட்டம் வாலசிராமணியைச் சேர்ந்த விஜி என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.  மோட்டார் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகளின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து வழங்குவதற்காக, அவர்களிடம் பணம் பெறுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டுநர் உரிமம் பெற வரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</video:description> 	<video:publication_date>2026-09-23T20:32:54+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/ubfcjacL-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/actress-ambika-slams-sister-radha-over-cheque-bounce-allegations-property-dispute-107210.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/radha-1.jpg</video:thumbnail_loc>


			<video:title>&quot;ராதாவுக்கு ரூ.5,000 கோடிக்கு சொத்து இருக்கும்&quot;.. பரபரப்பை கிளப்பிய நடிகை அம்பிகா!!</video:title>
		
			<video:description>சென்னை, செப்.23: தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையே நிலவி வரும் சொத்துப் பிரச்சனை தற்போது காவல்நிலையம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு வரை சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராதா, தனது கையெழுத்திடப்பட்ட காசோலைகளைப் பயன்படுத்தி சுமார் ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாக தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்தச் சூழலில், தன் மீது சுமத்தப்பட்ட காசோலை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தும், குடும்பச் சொத்துப் பிரிவினையின் பின்னணியை விளக்கியும் நடிகை அம்பிகா செய்தியாளர்களைச் சந்தித்துத் தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். காசோலை நிறுத்தம் மற்றும் ரூ.97 கோடி நிலுவை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை அம்பிகா, காசோலை மோசடி விவகாரத்தில் உண்மையாகப் பாதிக்கப்பட்டவர் தான் தான் என்று தெரிவித்தார். &quot;எனக்குக் காசோலைகளை வழங்கியதே நடிகை ராதா தான்; ஆனால் அவற்றை வங்கியில் செலுத்திய போது பணப் பரிவர்த்தனையை நிறுத்தி வைத்ததும் அவரே தான். சொத்துகளைப் பிரித்த வகையில் ராதா தரப்பில் இருந்து எனக்கு ரூ.97 கோடி வர வேண்டும், அதற்காகவே எனக்கு 5 காசோலைகள் வழங்கப்பட்டன. ராதா கையெழுத்திட்டுக்கொடுத்த காசோலை அவரது வீட்டில் தான் இருந்தது; அவரது வீட்டில் உள்ள காசோலையை நான் எப்படித் திருட முடியும்? காசோலையைக் கொடுத்ததும் ராதா தான், அதை நிறுத்தியதும் ராதா தான், இறுதியில் பணம் வராமல் பாதிக்கப்பட்டதும் நான் தான்&quot; என்று அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.</video:description> 	<video:publication_date>2026-09-23T14:57:24+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/UwBhVPmq-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/esakkiraja">Esakkiraja Selvarathinam</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/gem-veeramani-case-tvk-minister-rajmohan-questions-dmk-governance-107194.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/rajmohan-9.jpg</video:thumbnail_loc>


			<video:title>ஜெம் வீரமணி வழக்கு.. திமுகவை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பிய அமைச்சர் ராஜ்மோகன்!</video:title>
		
			<video:description>சென்னை, செப்.23: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள &#039;ஜெம் வீரமணி&#039; மீதான பாலியல் வழக்கு தொடர்பாக, தவெகவைச் சேர்ந்த அமைச்சர் ராஜ்மோகன் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, இந்த விவகாரத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், வழக்கு விசாரணையை மந்தப்படுத்தியது யார் என்பது குறித்தும் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும், இந்த வழக்கு முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். வீடியோ ஆதாரம் மற்றும் ரகுபதிக்குக் கண்டனம்: செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், முன்னாள் திமுக அமைச்சர் ரகுபதியின் அண்மைய பேச்சைச் சுட்டிக்காட்டி கடும் கண்டனம் தெரிவித்தார். &quot;வீடியோ கிளாரிட்டி மற்றும் ஹெச்டி தரம் குறித்துப் பேசுவதற்கு முன்பாகக் கொஞ்சம் மனசாட்சியும் மனிதாபிமானமும் இருக்க வேண்டும்&quot; என்று சாடிய அவர், அந்த வீடியோவின் தரம் எப்படி இருந்தாலும், அதில் உள்ள குற்றச்சாட்டின் தீவிரத்தன்மையை உணர்ந்து பேச வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்த வழக்கின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருவதாகவும், பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகள் முன்வந்து புகார் அளிக்கும் சூழலில், பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையில் திமுகவினர் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.</video:description> 	<video:publication_date>2026-09-23T14:40:18+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/xuK1deX7-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/esakkiraja">Esakkiraja Selvarathinam</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/valparai-gaur-rescued-from-septic-tank-after-four-hour-struggle-akkamalai-estate-107172.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/buffalo.jpg</video:thumbnail_loc>


			<video:title>&quot;செப்டிக் டேங்கில் விழுந்த காட்டெருமை&quot;.. வால்பாறையில் 4 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறை!</video:title>
		
			<video:description>கோவை, செப்.23: கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. வனவிலங்குகளின் இயற்கையான வாழ்விடங்களை ஒட்டியே மனிதக் குடியிருப்புகளும் தொழிலாளர்களின் லயன் படிகளும் அமைந்துள்ளதால், இங்கு யானைகள், சிறுத்தைகள் மற்றும் காட்டெருமைகளின் நடமாட்டம் இயல்பாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடித் தோட்டப் பகுதிகளுக்குள் நுழையும் காட்டெருமைகள், சில நேரங்களில் மனிதர்கள் அமைத்துள்ள ஆழமான குழிகள் மற்றும் பயன்பாட்டில் உள்ள தொட்டிகளில் விழுந்து விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், அக்காமலை எஸ்டேட் பகுதியில் நள்ளிரவில் கழிவுநீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமை ஒன்றை வனத்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டுள்ளனர். நள்ளிரவில் நடந்த எதிர்பாராத விபத்து: வால்பாறை அருகே அமைந்துள்ள அக்காமலை எஸ்டேட் 2-வது டிவிஷன் &#039;ஐந்துலயன் பாடி&#039; பகுதியில், எஸ்டேட் தொழிலாளியான ஜோதி என்பவரின் வீட்டருகே நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் சுமார் 5 வயது மதிக்கத்தக்கப் பெண் காட்டெருமை ஒன்று உலா வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர்த் தொட்டியின் (செப்டிக் டேங்க்) மீது அந்த காட்டெருமை ஏறியுள்ளது. எதிர்பாராதவிதமாகத் தொட்டியின் மேல்மூடி உடைந்ததில், காட்டெருமை தொட்டிக்குள் தவறி விழுந்து மேலே வர முடியாமல் தத்தளித்தது. காட்டெருமையின் அலறல் சத்தத்தைக் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக வால்பாறை வனச்சரக அலுவலருக்கும் எஸ்டேட் நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.</video:description> 	<video:publication_date>2026-09-23T13:20:07+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/aZHGcApd-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/sekaran-s">Sekaran S</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/salem-rajaganapathi-temple-grand-chariot-festival-marks-vinayagar-chaturthi-brahmotsavam-107063.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/temple-festival-4.jpg</video:thumbnail_loc>


			<video:title>சேலம் ராஜகணபதி கோவிலில் தேரோட்ட வைபவம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!</video:title>
		
			<video:description>சேலம் சுகவனேஸ்வரர் கோயிலின் உபகோவிலான ராஜகணபதி கோயில் சின்ன கடைவீதி பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 12 நாட்கள் பிரம்மோற்சவ வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ராஜகணபதி கோவிலுக்கு கும்பாபிஷேக வைப்பகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவம் நிகழ்ச்சி தொடங்கி நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் வைப்பவங்கள் நடைபெற்று கொண்டு வருகின்றன. மாலையில் ஒவ்வொரு நாளும் விநாயகர் பெருமான் பல்வேறு அலங்காரத்தில் காட்சியளிப்பார்.  இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சியாக ஒன்பதாம் நாளான இன்று தேரோட்ட வைபவம் நடைபெற்றது. முன்னதாக ராஜகணபதி மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு பால் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து பட்டாடைகள் உடுத்தப்பட்டு பல்வேறு வாசனை மலர்களால் மூலவர் ராஜகணபதிக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டன பின்னர் உற்சவமூர்த்தியான விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முதன் முறையாக தேரோட்ட நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ விநாயகப் பெருமான் எழுந்தருள செய்தனர்.</video:description> 	<video:publication_date>2026-09-23T10:43:22+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/0eghJcbV-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/sathis-s">Sathis S</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/kamarajar-breakfast-scheme-expands-tn-students-get-nutritious-morning-meals-says-minister-ramesh-107062.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/minister-ramesh-3.jpg</video:thumbnail_loc>


			<video:title>திருச்சியில் 590 பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்!</video:title>
		
			<video:description>திருச்சியில் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, கல்வியில் முழுமையான கவனம் செலுத்தும் வகையிலும் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் விரிவுபடுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் இன்று இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.  சென்னை திருவொற்றியூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொண்டு, காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளிலும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் 415 பள்ளிகளில் சுமார் 36,800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சிப் பகுதிகளில் 33 பள்ளிகளில் 5,845 மாணவர்களும், நகராட்சிப் பகுதிகளில் 27 பள்ளிகளில் 5,567 மாணவர்களும் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.</video:description> 	<video:publication_date>2026-09-22T23:49:32+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/9ufj8EYv-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/deepan">Deepan</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/minister-n-anand-shares-meal-with-elderly-woman-during-madurantakam-campaign-107019.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/minaabn.png</video:thumbnail_loc>


			<video:title>மூதாட்டி வீட்டில் உணவு அருந்தி குறைகளை கேட்ட அமைச்சர் என். ஆனந்த்</video:title>
		
			<video:description>மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற அவர், அவருடன் அமர்ந்து உணவு மற்றும் தண்ணீர் அருந்தினார்.  தொடர்ந்து, மூதாட்டியிடம் குடும்ப நிலை, அப்பகுதி மக்களின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் இயல்பாக அமர்ந்து உணவு அருந்தி, குறைகளை கேட்டறிந்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து, மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.</video:description> 	<video:publication_date>2026-09-23T10:42:48+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/P9RFBBTH-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/sathis-s">Sathis S</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/zero-accident-aim-in-crackers-production-huge-counsel-in-coimbatore-106793.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/crackers.jpg</video:thumbnail_loc>


			<video:title>பட்டாசு உற்பத்தியில் &#039;Zero Accident&#039; இலக்கு.. கோவையில் மாபெரும் கலந்தாய்வு!</video:title>
		
			<video:description>தமிழ்நாட்டின் மிக முக்கியத் தொழில் துறையான பட்டாசு உற்பத்தியில் விபத்துகளை முற்றிலுமாகத் தடுத்து, தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் &quot;பாதுகாப்பான பட்டாசு உற்பத்திக்கான தொழில்நுட்பம் – Zero Accident Vision நோக்கி&quot; என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாபெரும் கலந்தாய்வு கோவையில் நடைபெற உள்ளது. இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் சுமார் 90% பங்களிப்பை வழங்கி வரும் தமிழ்நாட்டின் பட்டாசுத் தொழில், ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வர்த்தகத்தையும், 7 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.  இத்தகைய பிரம்மாண்ட தொழில்துறையில் தொழிலாளர் பாதுகாப்பு, தானியங்கி இயந்திரமயமாக்கல், தீ தடுப்பு மற்றும் அவசரகாலத் தயார்நிலை ஆகியவை இனி தனித்தனி பிரச்சனைகளாகப் பார்க்கப்படாமல், ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்முறை முன்னுரிமையாக அணுகப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு பட்டாசு மற்றும் அமோர்சஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய பாதுகாப்பு உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தத் தேசிய கலந்தாய்வு, வரும் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கோவை ஈச்சனாரியில் உள்ள &#039;ரத்தினம் கிராண்ட் ஹாலில்&#039; நடைபெறவுள்ள SIDA Defence Expo 2026-ன் முக்கிய அங்கமாக நடைபெறுகிறது.</video:description> 	<video:publication_date>2026-09-21T23:49:32+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/JBRhBDco-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/sekaran-s">Sekaran S</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/pollachi-jayaraman-slams-ruling-party-over-false-cases-defends-aiadmk-at-coimbatore-airport-106775.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/jayaraman.jpg</video:thumbnail_loc>


			<video:title>ஆதவ் அர்ஜுனாவுக்கு அனுபவம் குறைச்சல்.. பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு!</video:title>
		
			<video:description>கோயம்புத்தூர் விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு ஆளும் கட்சியினர் மிரட்ட பார்க்கின்றனர். இந்த மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இது பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சாது. இது போன்ற பொய் வழக்குகளை சந்தித்துதான் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இயக்கத்தில் இருக்கிறோம். அதிமுகவின் வெற்றியை தடுக்க இவர்கள் செய்யும் முயற்சி அனைத்தும் பொய்த்துப்போகும் என்று அவர் கூறியுள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அனுபவம் குறைச்சல். பல கட்சி மாறி வந்தவர். இப்போது மந்திரி ஆகிவிட்டதால் அவருக்கு என்ன பேசுவது என தெரியவில்லை. அதிமுகவின் பாரம்பரியம் பெரியது. 55 ஆண்டை இந்த இயக்கம் கடந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</video:description> 	<video:publication_date>2026-09-21T22:50:35+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/G8MtTXXv-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/vinalin-sweety">Vinalin Sweety</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/farmers-conducted-protest-in-trichy-to-stop-mekedatu-dam-construction-106773.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/farmers-protest-2.jpg</video:thumbnail_loc>


			<video:title>மேகதாது அணை கட்ட அனுமதிக்காதே.. திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!</video:title>
		
			<video:description>கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ளது. மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதாலும் தமிழகத்தில் இருந்து மேகதாது அணைக்கு எதிராக தொடர் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தான், இன்று (செப்டம்பர் 21, 2026) மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து திருச்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் திரண்ட விவசாயிகள் தமிழக அரசே தமிழக அரசே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்காதே என முழக்கமிட்டனர். மேகதாது அணைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், திருச்சியில் இன்று விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</video:description> 	<video:publication_date>2026-09-21T22:37:15+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/h751c3y8-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/vinalin-sweety">Vinalin Sweety</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/kerala-idukki-adimali-landslide-destroys-house-five-families-escape-106622.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/landslide-1.jpg</video:thumbnail_loc>


			<video:title>கொட்டித்தீர்க்கும் கனமழை.. இடுக்கியில் வீட்டை பலிகொண்ட நிலச்சரிவு.. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 5 குடும்பங்கள்!!</video:title>
		
			<video:description>கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மலை மாவட்டங்களான இடுக்கி, மலப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாகப் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கும், தொடர் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் கடும் பீதியுடன் வசித்து வரும் நிலையில், அடிமாலி அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் வீடு ஒன்று முற்றிலுமாக இடிந்து நாசமானது. எனினும், உரிய நேரத்தில் மக்கள் சுதாரித்து வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அடிமாலியில் பயங்கர நிலச்சரிவு - ஒரு வீடு தரைமட்டம்: இடுக்கி மாவட்டம் மூணார்-வட்டவடா பாதையில் ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், அடிமாலி அருகேயுள்ள பழம்பள்ளிச்சல் (Pazhampallichal) பகுதியில் திங்கள்கிழமை மீண்டும் ஒரு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மலையிலிருந்து சரிந்து வந்த பெரும் பாறைகளும், சேறும் சகதியும் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி சீறிப்பாய்ந்தன. இந்த அசாத்திய வேகத்தில் வந்த நிலச்சரிவில் சிக்கி, அப்பகுதியில் இருந்த ஒரு குடியிருப்பு வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. நிலச்சரிவு ஏற்பட்ட காட்சி மற்றும் வீட்டின் அழிவு தொடர்பான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</video:description> 	<video:publication_date>2026-09-21T14:36:52+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/jqlS2xLJ-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/esakkiraja">Esakkiraja Selvarathinam</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/rameswaram-akkasalai-vinayagar-temple-viswakarma-jayanthi-celebration-flower-procession-106600.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/rameshwaram-1.jpg</video:thumbnail_loc>


			<video:title>ராமேஸ்வரத்தில் கோலாகலமாக நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழா.. பூத்தட்டு ஊர்வலம், சிறப்பு அபிஷேகம்!!</video:title>
		
			<video:description>புனிதத் தலமான ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ஆன்மீக மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களில் கீழரத வீதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ அக்கசாலை விநாயகர் திருக்கோவிலும் ஒன்றாகும். உலகப் படைப்புக்கும் கட்டிடக் கலை மற்றும் கைவினைத் தொழில்களுக்கும் மூலக் கடவுளாகப் போற்றப்படும் ஸ்ரீ விஸ்வகர்மா பகவானைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் விஸ்வகர்மா ஜெயந்தி விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமேஸ்வரம் விஸ்வகர்ம ஐந்தொழில் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட இத்திருக்கோவிலில், பாரம்பரியம் மாறாமல் பக்திச் பரவசத்துடன் இந்த ஆண்டிற்கான விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 30 ஆண்டு கால பாரம்பரிய பூத்தட்டு ஊர்வலம்: ராமேஸ்வரம் விஸ்வகர்ம ஐந்தொழில் சங்கத்தின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இந்த ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்ற வண்ணமயமான ஊர்வலம் நடைபெற்றது. குறிப்பாக, திரளான பெண்கள் தங்களது கைகளில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தட்டுகளை ஏந்தி வர, மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் தொடங்கியது. ராமேஸ்வரத்தின் நான்கு ரத வீதிகளின் வழியாகப் பக்திப் பாடல்கள் முழங்க வலம் வந்த இந்த பூத்தட்டு ஊர்வலம், இறுதியாக ஸ்ரீ அக்கசாலை விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.</video:description> 	<video:publication_date>2026-09-21T14:24:39+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/exdcioaV-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/esakkiraja">Esakkiraja Selvarathinam</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/elephants-bathe-in-river-with-calf-mother-elephants-tender-care-goes-viral-in-coimbatore-106071.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/elle-abth.png</video:thumbnail_loc>


			<video:title>குட்டியுடன் ஆற்றில் குளித்த யானைகள்: தாய் யானையின் வைரல் வீடியோ..</video:title>
		
			<video:description>கோவை மதுக்கரை அருகே குட்டி யானையுடன் ஆற்றில் குளித்து மகிழ்ந்த 3 காட்டு யானைகளின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மதுக்கரை சுற்றுவட்டாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், புதுப்பதி கிராமம் அருகே உள்ள ஆற்றுக்கு குட்டியுடன் வந்த யானைகள் தண்ணீர் அருந்தி, நீரில் குளித்து மகிழ்ந்தன.  பின்னர் வனப்பகுதியை நோக்கி சென்றபோது, குட்டி யானையின் முன்னங்காலில் காயம் இருப்பது தெரியவந்தது. வலியால் மெதுவாக தள்ளாடி நடந்த குட்டியை தாய் யானை தனது தும்பிக்கையால் அரவணைத்து பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றது.  இந்த நெகிழ்ச்சியான காட்சியை அவ்வழியாகச் சென்றவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காயமடைந்த குட்டி யானைக்கு வனத்துறை மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</video:description> 	<video:publication_date>2026-09-19T07:56:11+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/TCTVxYu5-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/tiruvarur-ration-shop-staff-refuse-goods-to-cardholders-from-other-areas-106014.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/ration-shop-.jpg</video:thumbnail_loc>


			<video:title>அமைச்சர் சொன்னால் நாங்க கேட்கனுமா...? ரேஷன் கடை ஊழியரின் அடவடி பேசிய வீடியோ வைரல்</video:title>
		
			<video:description>திருவாரூர் மாவட்டம், ஈபி காலணியில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடை எண் 18AP041PN கடையில் பொருட்கள் வாங்க செல்லும் வெளியூர் மற்றும் வேறு கடையில் குடும்ப அட்டை வைத்துள்ள சாமானிய மக்களுக்கு பொருட்கள் வழங்க முடியாது என்றும், அவ்வாறு வழங்க கூடாது என அதிகாரிகள் தங்களுக்கு உத்தவிட்டுள்ளதாகவும், அரசு போதுமான அளவு பொருட்கள் கடைகளுக்கு அனுப்புவது இல்லை என்று அரசு மீது குற்றச்சாட்டை ஆணவத்துடன் பேசி அனுப்பி வருகின்றனர். தற்போது அது தொடர்பான வீடியோ அமைச்சர் உத்தரவிற்கு இவ்வளவுதான் மரியாதையா..? என சமூக வலைத்தளங்களில் வைராக பரவி வருகிறது.  தமிழக சட்டசபையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு துறைகளின் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மீதான மானிய கோரிக்கையில் அமைச்சர் பி வெங்கடரமணன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள் தங்களுக்குரிய கடைகளில் மட்டும் தான் பெருட்கள் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  தமிழ்நாட்டில் எந்த கடைகளில் வேண்டுமானாலும் ரேVஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். நியாய விலை அட்டை கையில் இல்லாவிட்டாலும் அட்டையின் &#039;சாப்ட் காப்பி&#039; மொபைல் போனில்இருந்தால் கூட பொருட்களை வாங்கி கொள்ளலாம்&#039;&#039;என்று கூறி இருந்தார். இந்த உத்தரவை பல்வேறு ரேஷன் கடை ஊழியர்கள் மதிக்காமல் புதிய தவெக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றன என்றார்.</video:description> 	<video:publication_date>2026-09-18T17:26:28+05:30</video:publication_date>
<video:category>தமிழ்நாடு செய்திகள்</video:category>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/0hXrPA32-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/vinoth-v">Vinoth V</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/tiger-that-killed-two-people-captured-in-gudalur-after-intensive-forest-department-operation-105938.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/puli-m.png</video:thumbnail_loc>


			<video:title>கூடலூரில் இருவரை கொன்ற புலி பிடிபட்டது!</video:title>
		
			<video:description>கூடலூர் வனக்கோட்டம், ஓவேலி வனச்சரகப் பகுதியில் இரண்டு பேரைத் தாக்கிக் கொன்ற புலி, வனத்துறையினரின் தீவிர நடவடிக்கைக்குப் பின் பிடிபட்டது. புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முதுமலை புலிகள் காப்பகம், நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 305 தானியங்கி மற்றும் GSM கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது. மேலும், புலியைப் பிடிக்க 14 இடங்களில் பிரத்யேக கூண்டுகள் அமைக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட வனத்துறை சிறப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, புலியைப் பிடிக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினர். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு வனத்துறை அமைச்சர் R.V. இரஞ்சித்குமார் கூடலூர் பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். தற்போது புலி பிடிபட்டுள்ளதால், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.</video:description> 	<video:publication_date>2026-09-18T13:33:09+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/jsj8fOm0-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/wild-elephant-attempts-to-attack-cow-in-coimbatores-thadagam-cctv-footage-sparks-concern-105877.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/tadagam-ele.png</video:thumbnail_loc>


			<video:title>தடாகத்தில் மாட்டை தாக்க முயன்ற காட்டு யானை.. வெளியான சிசிடிவி காட்சிகள்..</video:title>
		
			<video:description>கோவை மாவட்டம் தடாகம், மாங்கரை, சோமையனூர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  இந்நிலையில், நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, தடாகம் உச்சயனூர் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளது. பின்னர் எஸ்.எம். நகர் பகுதியில் உள்ள மாட்டு கொட்டகைக்குள் புகுந்து மாட்டு தீவனங்களை தின்றுள்ளது.  இதையடுத்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் கத்தியதால், ஆத்திரமடைந்த யானை ஒரு மாட்டை தாக்க முயன்றது. அதிர்ஷ்டவசமாக அந்த மாடு தாவி குதித்து தப்பியதால், யானை அங்கிருந்து சென்றது.  இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</video:description> 	<video:publication_date>2026-09-18T07:46:35+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/vLw2444w-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/madurai-meenakshi-amman-temple-maha-kumbabhishekam-held-grandly-after-17-years-105676.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/meenju-.png</video:thumbnail_loc>


			<video:title>17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!</video:title>
		
			<video:description>17 ஆண்டுகளுக்குப் பிறகு உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக கோயில் வளாகம் முழுவதும் பல மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செப்டம்பர் 11ஆம் தேதி முதல் கால பூஜைகள் தொடங்கிய நிலையில், 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.  காலை 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  கும்பாபிஷேகத்தின்போது கோபுரங்களின் கீழ் இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இன்று இரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா நடைபெற உள்ளது. இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.</video:description> 	<video:publication_date>2026-09-17T13:25:14+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/wR2jjb53-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/devotional-fervour-grips-madurai-as-meenakshi-amman-temple-holds-maha-kumbabhishekam-105589.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/meenu-.png</video:thumbnail_loc>


			<video:title>மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..</video:title>
		
			<video:description>உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (செப்.17) வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபமும் புனரமைக்கப்பட்டது. வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் அமைக்கப்பட்ட யாகசாலையில் செப்.11 முதல் கால பூஜைகள் நடைபெற்றன. 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.  காலை 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், 8.10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இன்று இரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.</video:description> 	<video:publication_date>2026-09-17T07:28:39+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/V3loLsG2-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/aarthi-govindaraman">Aarthi Govindaraman</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/seventh-phase-of-yagasala-pooja-held-ahead-of-meenakshi-sundareswarar-temple-consecration-ceremony-in-madurai-105160.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/meenakshi-amman-temple-festival.jpg</video:thumbnail_loc>


			<video:title>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. இன்று 7வது கட்ட யாகசாலை பூஜை!</video:title>
		
			<video:description>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17, 2026 அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 11, 2026 முதலே பூர்வாங்க பூஜைகள் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் கோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (செப்டம்பர் 16, 2026) 7வது கட்ட யாகசாலை பூஜை நடைபெற்றது. இதனை மதுரை ஆதீனம் நடத்தி வைத்த நிலையில், கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதனால், கோயில் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.</video:description> 	<video:publication_date>2026-09-16T00:13:39+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/bs7yuXo3-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/vinalin-sweety">Vinalin Sweety</video:uploader></video:video></url><url><loc>https://www.tv9tamilnews.com/videos/madurai-meenakshi-amman-temple-illuminated-ahead-of-kumbabhishekam-ceremony-105184.html</loc><video:video>

			<video:thumbnail_loc>https://images.tv9tamilnews.com/wp-content/uploads/2026/09/meenakshi-amman-temple.jpg</video:thumbnail_loc>


			<video:title>கும்பாபிஷேகத்திற்கு தயராகும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கோபுரங்கள்!</video:title>
		
			<video:description>மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்டம்பர் 17, 2026 அன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் செப்டம்பர் 11, 2026 முதலே தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான், கோயில் கோபுரங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயில் கோபுரங்கள், பிரகாரங்கள், மூலவர் சன்னதிகள், கொடிமரங்கள் என அனைத்து இடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, கோயில் முழுவதையும் அலங்கரிக்க சுமார் 5 டன் வண்ண மலர்களும் வந்து இறங்கியுள்ளன. அரளிப்பூ, இருவாச்சி பூக்கள், மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு என பல வண்ணங்களில் கோயில் முழுவதையும் அலங்கரிக்க வண்ண மலர்கள் வந்து இறங்கியுள்ளன. இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</video:description> 	<video:publication_date>2026-09-15T12:51:57+05:30</video:publication_date>
<video:category>வீடியோ - Tamil News Videos</video:category><video:player_loc allow_embed="yes">https://content.jwplatform.com/players/BLmBfLly-i3kV1w3s.html</video:player_loc>
	
			<video:uploader info="https://www.tv9tamilnews.com/author/vinalin-sweety">Vinalin Sweety</video:uploader></video:video></url></urlset>