Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரீல்ஸ் மூலம் ரூ.15,000 சம்பாதிக்கும் வாய்ப்பு – மத்திய அரசு அறிவித்த போட்டி – என்ன விதிகள்?

Create reels, win government reward : ரீல்ஸ் உருவாக்கி பதிவிடுவதன் மூலம் ரூ.15,000 வெல்லலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த போட்டியை எப்படி விண்ணப்பிப்பது, இந்த போட்டியின் விதிகள் என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.

ரீல்ஸ் மூலம் ரூ.15,000 சம்பாதிக்கும் வாய்ப்பு  – மத்திய அரசு அறிவித்த போட்டி – என்ன விதிகள்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Jul 2025 20:20 PM

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் (Reels)பதிவிடுபவர்களுக்கு ஏற்ப ஒரு போட்டியை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. நீங்கள் ஒரு கிரியேட்டராக இருந்தால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம் ரூ. 15,000 பெறலாம். டிஜிட்டல் இந்தியாவின் 10 ஆண்டுகள் நிறவைடந்ததையடுத்து இந்த போட்டி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் டிஜிட்டல் இந்தியாவைப் (Digital India) பற்றி 1 நிமிட வீடியோவை உருவாக்க வேண்டும். சிறந்த ரீல்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரூ.15,000 பரிசு வழங்கப்படும். இந்தப் போட்டியில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 1, 2025. எனவே இந்த திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது? என்ன விதிகள் ஆகியவற்றை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் போட்டியின் நோக்கம் என்ன?

டிஜிட்டல் இந்தியா சாதாரண மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதைக் காட்ட இந்த போட்டி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக யுபிஐ (UPI)  எவ்வாறு பணம் செலுத்துவதை எளிதாக்கியது, ஆன்லைன் கல்வி எவ்வாறு சாத்தியமானது, DigiLocker போன்ற செயலிகள் உங்கள் வாழ்க்கையை மாற்றியது. மேலும் டிஜிட்டல் சேவையிலிருந்தும் நீங்கள் என்ன நன்மைகளைப் பெற்றீர்கள் என்பது போன்ற உங்கள் அனுபவத்தை வீடியோவில் பகிர்ந்து கொள்ளலாம்.

இதையும் படிக்க: இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop செட் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

இந்த ரீல் போட்டியின் மூலம் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் வெகுமதி அளிக்கும். முதல் 10 இடங்களைப் பிடிக்கும் பங்கேற்பாளர்களுக்கு ரூ.15,000 பரிசும், அடுத்த 25 பேருக்கு ரூ.10,000 பரிசும், மேலும் 50 பேருக்கு தலா ரூ.5,000 பரிசும் வழங்கப்படும்.

வீடியோக்களை உருவாக்குவதற்கான விதிகள் என்ன?

இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க நீங்கள் நினைத்தால், முதலில் வீடியோவின் நிபந்தனைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வீடியோ 1 நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாது. உங்கள் வீடியோ MP4 வடிவத்தில் மட்டுமே இருக்க வேண்டும். நீங்கள் ஒரு இன்ஸ்டாகிராம் ரீலை உருவாக்குவது போல, இது போர்ட்ரெய்ட் முறையில் உருவாக்கப்பட வேண்டும். வீடியோவை இந்திய மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ தயாரிக்கலாம். வீடியோ ஒரிஜினலாக இருக்க வேண்டும் மற்றும் இதற்கு முன்பு எங்கும் பதிவேற்றப்பட்டிருக்கக்கூடாது.

இதையும் படிக்க: இணையத்திற்கு அடிமையாகாமல் இருக்க இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

எப்படி விண்ப்பிப்பது?

முதலில் நீங்கள் https://innovateindia.mygov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் டிஜிட்டல் இந்தியா ரீல் போட்டிக்கான ஆப்சனைக் காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும். உங்களைப் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டு, பின்னர் ரீல்ஸ் வீடியோவைப் பதிவேற்றவும். சமர்ப்பிக்கும் போது, உங்கள் காணொளி எந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது பற்றிய சிறிய விளக்கத்தையும் நீங்கள் கொடுக்க வேண்டும்.