Tamil Nadu News Live Updates: தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
Tamil Nadu Breaking news Today 20 July 2025, Live Updates: சென்னை பனையூரில் இருக்கக்கூடிய கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கியமாக மதுரையில் நடக்கக்கூடிய கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு குறித்து பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LIVE NEWS & UPDATES
-
TVK District Secretaries Meeting: விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
சென்னை பனையூரில் இருக்கக்கூடிய கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கியமாக மதுரையில் நடக்கக்கூடிய கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு குறித்து பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
100 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த ரேஷன் கடை விற்பனையாளர்.. ஆட்சியரிடம் புகார் அளித்த வாடிக்கையாளர்..
பாளையங்கோட்டை கூட்டுறவு நியாயவிலை கடையில் பழைய 100 ரூபாய் நோட்டை ஏற்க மறுத்ததால் வாடிக்கையாளர் ரத்தினகுமார் தாக்கப்பட்டார். விற்பனையாளரின் தகாத வார்த்தைகள் மற்றும் பணத்தை முகத்தில் வீசிய செயல் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். மேலும், ரத்தினகுமார், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் படிக்க
-
மெமு ரயில்கள் விவரம்
ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் பராமரிப்பு பணிகளால், காட்பாடி–ஜோலார்பேட்டை இடையிலான இரண்டு மெமு ரயில்கள் (66017 மற்றும் 66018) முழுமையாக ரத்து. பச்சக்குப்பம் மற்றும் மேல்பட்டி ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
ரத்தாகும் ரயில்கள் விவரம்
கண்ணூர்-கோவை விரைவு ரயில் (16607) பாலக்காடு வரை மட்டுமே செல்லும், கோவை வரை செல்லாது.
மதுரை-கோவை ரயில் (16722) பொள்ளாச்சி வரை மட்டுமே இயங்கும், கோவைக்கு செல்லாது.
காட்பாடி–ஜோலார்பேட்டை இடையிலான மெமு ரயில்கள் 66017 மற்றும் 66018 இரண்டும் ஜூலை 21 அன்று ரத்து செய்யப்படுகிறது.
-
Train Cancellation : முக்கிய ரயில்கள் இயக்கம் ரத்து
கோவை, ஜோலார்பேட்டையில் பராமரிப்பு பணிகள் காரணமாக 2025 ஜூலை 21, 22 ஆம் தேதிகளில் முக்கிய ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளவும், ரயில்வே அறிவிப்புகளை கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
-
வீட்டை விட்டு வெளியேறிய புதுப்பெண்
அன்பரசி தனது கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அவர் பிறந்த வீட்டுக்கும் போகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை. பின்னர் அவர் கோவை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
-
Cuddalore Crime : செல்போனால் வந்த சண்டை.. ஷாக் சம்பவம்
வேறொருவருடன் செல்போனில் அடிக்கடி பேசியதை கணவர் சந்தேக கண்ணுடன் தகராறு செய்ததால், திருமணமான 10 மாதங்களில் தாலியை கழற்றி விட்டு மனைவி வெளியேறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
-
Chennai Rains : சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை வரை இரவு நேரங்களில் பதிவாகி வருகிறது
-
நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்
கேரள எல்லையோர மாவட்டங்களான தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 21 2025 தேதியான நாளை நீலகிரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Weather Today : மிக கனமழை பெய்ய வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது அது போல் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ஜூலை 20, 2025 நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2026ன் தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வரும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூலை 20) நடைபெறுகிறது. இதில் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடைபெறும் 2வது மாநில மாநாடு தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தலைமையிலான போராட்டம் விழுப்புரத்தில் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே தந்தை – மகன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சீசன் காலமாக இருப்பதால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது. கனமழை காரணமாக அருவியில் நேற்று (ஜூலை 19) குளிக்க தடை விதிக்கப்பட்டதால் பொதுமக்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இப்படியான நிலையில் இன்றைய நிலவரத்தைப் பொறுத்து அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குற்றால சாரல் திருவிழா இன்று தொடங்குகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக வெயில் தாக்கம் குறைந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இப்படியான நிலையில் இன்று தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாசம் தொடங்கியுள்ள நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோயில் ஆடிப்பூரம் திருவிழாவுக்கான கொடியேற்றம் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதுபோன்ற தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை நாம் அப்டேட்டுகளாக காணலாம்.
மேலும் தமிழ்நாடு செய்திகளை இங்கே கிளிக் செய்து காண்க
Published On - Jul 20,2025 7:04 AM