Tamil Nadu News Highlights: மீண்டும் அம்மா கிளினிக்.. வாக்குறுதி கொடுத்த இபிஎஸ்
Tamil Nadu Breaking news Today 19 July 2025, HighLights: 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அம்மா கிளினிக் திட்டம் கொண்டு வரப்படும் என கூறியுள்ளார்.

தமிழ்நாடு செய்திகள்
2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 இல் எங்களுடைய வேட்டை காசு வாங்காமல் போட வேண்டும் ஓட்டை அம்பேத்கரின் கோட் சூட் மட்டுமல்ல அவரது கோட்பாடுகளும் மிக முக்கியம் என தெரிவித்துள்ளார். மதுரையில் ஆசிரியை அளித்த வரதட்சணை புகாரில் தலைமறைவாக உள்ள காவலர் பூபாலன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்கள் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜூலை 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நியாய விலை கடை ஒன்றில் பழைய 100 ரூபாய் தாள் செல்லாது என கூறி ஊழியர் அவ மரியாதையாக நடத்தியதாக கூறி பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக இன்று நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து திமுக பங்கேற்கிறது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மெகா வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுபோன்ற தமிழ்நாட்டின் நிகழ்வுகளை அப்டேட்டுகளாக நாம் இங்கு காணலாம்.
மேலும் தமிழ்நாடு செய்திகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
LIVE NEWS & UPDATES
-
திருப்புவனம் அஜித்குமார் வழக்கு.. வேகமெடுக்கும் சிபிஐ விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்தை விசாரணைக்காக அழைத்துச் சென்ற டெம்போ வேனை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் அஜித்தை தாக்கியதாக சொல்லப்படும் கோசாலையில் நடந்ததை சித்தரித்து சிபிஐ அதிகாரிகள் நடித்து காண்பித்தனர்.
-
M.K.Muthu: மறைந்த மு.க.முத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்து இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
-
தமிழ்நாட்டில் மீண்டும் அம்மா கிளினிக் தொடங்கப்படும்: இபிஎஸ்
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியமைத்தால் அம்மா கிளினிக் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திமுக ஆட்சியில் இந்த திட்டம் மக்களை தேடி மருத்துவம் என்ற பெயரில் மாற்றப்பட்டு வேறு முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
-
நாமக்கலில் கிட்னி விற்பனை மோசடி.. மத்திய அரசின் சுகாதாரத்துறை விசாரணை?
நாமக்கலில் கிட்னி விற்பனை மோசடி நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
விரைவில் 2,340 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.. அன்பில் மகேஸ் அறிவிப்பு
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இரண்டாம் நிலை ஆசிரியர் பணிகளுக்கான 2,340 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். விரைவில் நல்ல செய்தி வரும் எனவும் கூறியுள்ளார். மேலும் படிக்க
-
முதலமைச்சர் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்த பிறகு மக்களைப் பற்றி சிந்திக்காமல் வீட்டு மக்களைப் பற்றி சிந்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோர் அதிகார மையங்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்.. வெளியான முக்கிய அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெறுவதற்கு வணிக வங்கியின் தடையில்லா சான்று மட்டும் போதுமானது. பயிர் மற்றும் கால்நடைக் கடன்களுக்கு சிபில் அறிக்கை கேட்கக்கூடாது என கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேசமயம் மற்ற வங்கிகளில் கடன் பெற்று வட்டி செலுத்தாமல் இருப்போரிடம் மட்டும் அறிக்கை கேட்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
-
Chennai Rain Live News: சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை.. மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் சற்று சிரமப்பட்டனர்.
-
தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பு.. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதாக எழுந்த புகார் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரணை செய்துள்ளது. தொடர்ந்து ஜூலை 21ம் தேதிக்குள் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து கர்நாடகா அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது
-
திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில் திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேர்த்திக் கடன்களாக காவடிகளுடன் கோயிலை வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
-
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கும்மிடிப்பூண்டி சிறுமி டிஸ்சார்ஜ்
திருவள்ளூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 8 நாட்களுக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். தற்போது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் – அரியலூருக்கு உள்ளூர் விடுமுறை
மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளையொட்டி அரியலூர் மாவட்டத்திற்கு 2025 ஜூலை 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அன்றைய தினம் செயல்படாது எனவும் மாற்று வேலைநாள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
கும்மிடிப்பூண்டி சிறுமிக்கு நீதி கேட்டு அதிமுகவினர் போராட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தடையை மீறி இந்த போராட்டம் நடந்ததால் போக்குவத்து பாதிக்கப்பட்டது.
-
திமுகவின் போலி நாடகங்களை மக்கள் நம்பப்போவதில்லை – எல்.முருகன்
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.11 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கியுள்ளது. வழக்கம்போல நிதி வழங்கவில்லை என திமுக தவறான தகவலை கூறுகிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். திமுகவின் போலி நாடகங்களை மக்கள் நம்பப்போவதில்லை என அறிக்கை மூலம் விமர்சித்துள்ளார்.
-
Cuddalore: பிரிந்து சென்ற மனைவி.. காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்..
கடலூர் மாவட்டத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற மனைவி மற்றொரு நபருடன் காதல் வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் கணவன் மறுப்பேதும் சொல்லவில்லை. இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் படிக்க
-
அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பமா? – அண்ணாமலை சொன்ன பதில்!
அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற இந்த கூட்டணி இணைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க
-
M.K.Muthu: மு.க.முத்து மறைவு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்
கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்து உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் மு.க.முத்து மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார.
-
பட்டியலின மக்களுக்கு கடன் வழங்க மறுப்பா? – வங்கி மீது புகார்
தேனி பெரியகுளம் பகுதியில் பிரபா என்பவர் மகளிர் சுய உதவி குழு அமைத்த நிலையில் வடகரையில் உள்ள கனரா வங்கியில் கடன் கேட்டபோது ஊழியர்கள் சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான புகார் அடிப்படையில் எஸ்.சி, எஸ்.டி ஆணையம் அளித்த உத்தரவின் பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு..
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நீலகிரி கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்.. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தாவரவியல் பூங்கா, பைன் காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடல்..
இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நிலச்சரிவு, வெள்ளம், மரங்கள் விழுதல் போன்ற அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது; மக்கள் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மூடப்பட்ட முக்கிய இடங்களில் தாவரவியல் பூங்கா, பைன் காடு, தொட்டபெட்டா, பைக்காரா நீர்வீழ்ச்சி, அவலாஞ்சி உள்ளிட்டவை உள்ளன.
-
கனமழை எதிரொலி.. நீலகிரியில் சுற்றுலா தளங்கள் மூடல்..
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை தீவிரமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் படிக்க..
-
தூத்துக்குடி புதிய விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி..
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார். மேலும், 2025 ஜூலை 28ஆம் தேதி தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆடி திருவாதிரை விழாவில் கலந்துக்கொள்ளும் பிரதமர் மோடி.. திட்டம் என்ன?
2025 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வருகை தருகிறார். குறிப்பாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் படிக்க
-
கோவலத்தில் பூநாரைகள் வர இது தான் காரணம்.. BNHS முன்னாள் துணை இயக்குனர் எஸ். பாலச்சந்திரன்..
வழக்கமாகப் புலிகாட் ஏரி, கோடியக்கரை போன்ற இடங்களில் பெருமளவில் காணப்படும் பூநாரைகள், தற்போது கோவளத்திற்கு வருகை தந்துள்ளது ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. பாம்பே இயற்கை வரலாற்று சங்கத்தின் (BNHS) முன்னாள் துணை இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் கருத்துப்படி, பூநாரைகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்யும். இனப்பெருக்கத்திற்குப் பிந்தைய ஓய்வு மற்றும் உணவுத் தேடலுக்காக அவை நீண்ட காலம் ஒரே இடத்தில் தங்கும் என தெரிவித்துள்ளார்.
-
கோவலத்தில் குவிந்த பூநாரைகள்.. மகிழ்ச்சியில் பறவை ஆர்வலர்கள்..
சென்னையை அடுத்த கோவளம் பகுதியில் பூநாரைகள் அதிகமாக காணப்படுவது வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. உணவின் கிடைப்பும், அமைதியான சூழலும் இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. இது கோவளத்தின் பல்லுயிர் பெருக்கத்திற்கு நல்ல அறிகுறியாகும். மேலும் படிக்க..
-
மு.க முத்துவின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலினின் சகோதரரான மு க முத்து உயிரிழந்ததை தொடர்ந்து, இன்று நடைபெற இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்:
முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் – தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.
தந்தை முத்துவேலர்… pic.twitter.com/4pXuTAKjf1
— M.K.Stalin (@mkstalin) July 19, 2025
-
மு.க முத்து உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு க முத்து உடல் நலக்குறைவால் இன்று அதாவது ஜூலை 19 20 25 அன்று காலமானார். இவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் படிக்க..
-
வீடு புகுந்து பெண்ணை வெட்டிய மர்ம நபர்கள்.. போலீசார் விசாரணை..
ராமநாதபுரம் மாவட்டம் விஜயகோபால் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஜெர்மின் (36) இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு 14 வயதில் மகள், 10 வயதில் மகன் உள்ளனர். விஜயகோபால் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு துணை ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாட்டால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் பிள்ளைகளுடன் இருந்த அவரை, மர்ம நபர்கள் வீடு புகுந்து வெட்டியுள்ளனர். இது தொடர்பாக போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பிள்ளைகள் முன்பு வீடு புகுந்து பெண் கொலை.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி..
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடியில் ஜெர்மின் என்பவர், கணவர் விஜயகோபாலுடன் பிரிந்து தனியாக வசித்து வந்தார். வீட்டில் மகன், மகளுடன் இருந்தபோது, இரவு நேரத்தில் முகமூடி அணிந்த இருவர் நுழைந்து அவரை கொலை செய்தனர். விஜயகோபால் உத்தரகாண்டில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் படிக்க..
-
குற்றால அருவியில் குளிக்க தடை.. மக்கள் ஏமாற்றம்..
நீர்வீழ்ச்சிகளில் அதிகப்படியான நீர் வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் என்பதன் காரணமாக குற்றாலத்திற்கு ஏராளமான மக்கள் படையெடுத்துள்ளனர். ஆனால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
தென்காசியில் தொடரும் கனமழை..
ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் தென்காசி மாவட்டத்தில் இருக்கக்கூடிய குற்றாலத்தில் சீசன் தொடங்கும். இந்த குறிப்பிட்ட சீசனில் ஏராளமான மக்கள் இங்கு வருகை தருவார்கள். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையானது ஜூலை 21 2025 வரை அதாவது அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க தடை…
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சிகளில் அதிகப்படியான நீர் வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
-
Chennai Crime: பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை
சென்னை பெரும்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 50 வயது முதியவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் இருக்கும் சாலையில் இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
M.K.Muthu: கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்து மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
Tirunelveli Live News: தனியார் பள்ளி பேருந்து தீ வைப்பு – ஒருவர் கைது
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்துக் கொண்டதால் அப்பகுதி மக்கள் பள்ளியை சூறையாடினர். அப்போது பள்ளி பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தூய்மை இந்தியா திட்டம்.. சிறப்பாக செயல்பட்ட நாமக்கலுக்கு விருது!
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி தமிழ்நாடு அளவில்நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இதனிடையே டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்
-
வேலை செய்யாத மெட்ரோ குடிநீர் மொபைல் செயலி.. மக்கள் அதிருப்தி
சென்னை மெட்ரோ குடிநீர் நிர்வாகம் சார்பில் செயல்பாட்டில் உள்ள மொபைல் செயலி வேலை செய்யாததால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர். மேலும் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் அளிக்கப்பட்டாததால் கடும் அதிருப்தி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
இளைஞர்களை திசை திருப்ப சீமான் முயற்சி.. வன்னி அரசு குற்றச்சாட்டு
சாதி, மதவாதத்துக்கு எதிராக இளைஞர்கள் போராடுவதை திசை திருப்ப நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநாடுகளை நடத்தி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
-
Madurai: வரதட்சணை கொடுமை வழக்கில் காவலர் கைது
மதுரை மாவட்டத்தில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த கணவரான காவலர் பூபாலனை போலீசார் கைது செய்தனர். மனைவியை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தினேன் அவர் பேசிய ஆடியோக்கள் வெளியான நிலையில் பூபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் படிக்க
-
குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு – குளிக்க தடை
கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புலியருவியில் மட்டும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
-
Edappadi Palanisamy: கம்யூனிஸ்ட் இயக்கம் மாசடைந்து விடக்கூடாது – எடப்பாடி பழனிசாமி
திராவிட முன்னேற்றக் கழகம் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி சப்போர்ட் செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். வரலாறு படைத்த இயக்கம் மாசடைந்து விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் படிக்க
-
குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் – 3 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படிக்க
-
வரதட்சணை கொடுமை புகார்.. காவல்துறையில் இருந்து அப்பா, மகன் சஸ்பெண்ட்
மதுரையில் வரதட்சணை கொடுமை செய்ததாக மனைவியால் குற்றம்சாட்டப்பட்ட காவலர் பூபாலன் பேசும் ஆடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைமறைவாக உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் அவரது தந்தையான எஸ்.ஐ. செந்தில்குமரனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
பனிமயமாதா கோயில் திருவிழா.. முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா கோயிலின் 443வது திருவிழா வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க
-
Tamilnadu Weather: 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் ஜூலை 19ம் தேதி 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி, தென்காசி, கன்னியாகுமரி,திருநெல்வேலி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
Tamil Nadu Rains Live: சென்னையில் இரவு நேரம் மழை தொடரும்
சென்னையில் நேற்றிரவு (ஜூலை 18) விடிய விடிய மழை பெய்ததால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். மேலும் படிக்க