உயரதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள்.. மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்!
Mayiladuthurai DSP Sundaresan Suspend : மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். கார் பறிக்கப்பட்ட விவகாரத்தில் உயர் அதிகாரிகளை குற்றச்சாட்டி, டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிஎஸ்பி சுந்தரேசன்
சென்னை, ஜூலை 19 : மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனை ((Mayiladuthurai DSP Sundaresan) பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். கார் பறிக்கப்பட்ட விவகாரத்தில் உயர் அதிகாரிகளை குற்றச்சாட்டி, டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டி அளித்திருந்தார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, பேட்டி அளித்தாக சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக இருப்பவர் சுந்தரேசன். இவர் இங்கு 2024ஆம் ஆண்டு நவம்பர் முதல் பணியாற்றி வருகிறார சட்டவிரோதமாக சாராயம் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில், 2025 ஜூலை 18ஆம் தேதி இவர் வாகனத்தில் செல்லாமல், நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த சுந்தரேசன், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தனது வாகனத்தை பறித்துக் கொண்டதாகவும், இதனால் ஒரு வாரமாக நடந்து சென்றுக் கொண்டிருக்கிறேன். நேர்மையான அதிகாரியான எனக்கு நான்கு மாதங்களாக சம்பவம் வழங்கப்படவில்லை. ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன் என்று தெரிந்து தான் பேட்டி அளிக்கிறேன் என கூறியிருந்தார். இவரது குற்றச்சாட்டுகள் தமிழக காவல்துறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read : பிரசவமா? பயத்தில் மர்மமான இளம்பெண்.. அடுத்து என்ன? ஈரோட்டில் நடந்த சம்பவம்!
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்
இப்படியான சூழலில், 2025 ஜூலை 18ஆம் தேதியான நேற்று, சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய தஞ்சை டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி சரக டிஐஜிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது, சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, பேட்டி அளித்தாக சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, செய்தியாளர்களுக்கு 2025 ஜூலை 19ஆம் தேதியான இன்று பேட்டி அளித்த சுந்தரேசன், “கடந்த கால குற்றச்சாட்டுகளை ஊடகங்களில் பரப்புவதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், நான் ஏன் அப்போது இடைநீக்கம் செய்யப்படவில்லை?
Also Read : அஜித் குமார் வழக்கில் புதிய திருப்பம்.. சிபிஐ விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
எனது 30 ஆண்டுகால சேவையில், நான் ஒருபோதும் இடைநீக்கத்தை சந்தித்ததில்லை. அது எனது சாதனையைப் பற்றிப் பேசுகிறது. எனக்கு உயிருக்கு ஆபத்து என்று பயமாக இருக்கிறது. அரசாங்கம் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நான் குற்றவாளி என்றால், என்னைத் தண்டியுங்கள். ஆனால் முதலில் விசாரணை நடத்துங்கள். தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, முதலமைச்சர் தலையிட்டு நீதியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.