இந்த 4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்குப்போகுது.. அலர்ட் மக்களே!!
Rain today: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை, நவம்பர் 12: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (நவ.12) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 13 முதல் 15-ம் தேதி வரை ஒரிரு இடங்களிலும், 16, 17 தேதிகளில் ஓருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கிய நிலையில், அம்மாத இறுதி வரை சற்று தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக அக்டோபர் மாதத்தில் அதிகமான மழை பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க : SIR-க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக கூட்டணி கட்சிகள்!
இந்த மாவட்டங்களில் இன்று கனமழை:
தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேசயம், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.




நவ.13, 14ம் தேதிகளில் மழை வாய்ப்பு:
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நவ.13, 14 தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவ.15, 16ம் தேதிகளில் மழை வாய்ப்பு:
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : தொடங்கும் சபரிமலை சீசன்.. தமிழகம் வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..
அதிகபட்ச மழை பொழிவு:
கடந்த 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் 3 செ.மீ, சென்னை மதுரவாயல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.