இன்றிரவு இந்த 7 மாவட்டங்களுக்கு கனமனழைக்கான ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Orange Alert : தமிழகத்தில் நவம்பர் 12, 2025 அன்று இரவு 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.  இதன் தாக்கத்தால் தென் தமிழ்நாட்டில் மழை வலுப்பெற்று வருகிறது.

இன்றிரவு இந்த 7 மாவட்டங்களுக்கு கனமனழைக்கான ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மாதிரி புகைப்படம்

Published: 

12 Nov 2025 21:46 PM

 IST

சென்னை, நவம்பர் 12 : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை (Heavy Rain) பெய்து வருகிறது.  தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.  இதன் தாக்கத்தால் தென் தமிழ்நாட்டில் மழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக நவம்பர் 12, 2025 இரவு வரை தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழநாட்டில்  7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம். 

7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்

வடகிழக்கு பருவமழை காரணாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக  தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த நவம்பர் 11, 2025  இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் இன்று காலை வரை சில பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்தது.  இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று இரவிற்கான புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க : இந்த 4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கப்போகுது.. அலர்ட் மக்களே!!

அதில், நவம்பர் 12, 2025  இன்றிரவு 10 மணி வரை தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில்  குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலைத் துறை தெரிவித்துள்ளது. மேலும் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பும் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் கனமழை

  • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 13 முதல் 15, 2025 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

  • நவம்பர் 17, 2025 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு பகுதிகளில் மிதமான மழை வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை வாய்ப்புள்ளது.

  • நவம்பர் 18, 2025 அன்று தமிழ்நாடு முழுவதும் மிதமான மழை பல இடங்களில் பெய்ய வாய்ப்பு; தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பேருந்துகளை இயக்க முடியாது…. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்

சென்னையை பொறுத்தவரை வானம் பகுதியளவில் மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 32–33°C, குறைந்தபட்சம் 26°C இருக்கும். மேலும் நவம்பர் 13, 2025 அன்று வானம் மேகமூட்டமாகவே இருக்கும். நகரின் சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது.