Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பீகார் தேர்தல் முடிவுகள்… தமிழகத்திற்கு காத்திருக்கும் செய்தி – வானதி சீனிவாசன் கருத்து

Bihar Election Result : பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அதிக தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் பிரதிபலிக்கும் என்றார்.

பீகார் தேர்தல் முடிவுகள்… தமிழகத்திற்கு காத்திருக்கும் செய்தி – வானதி சீனிவாசன் கருத்து
வானதி சீனிவாசன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Nov 2025 14:56 PM IST

சென்னை, நவம்பர் 14:  பீகார் (Bihar) மாநிலத் தேர்தல் முடிவுகள், எதிர்வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக (BJP) எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக நவம்பர் 14, 2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் மக்கள், குறிப்பாக பெண்கள், அதிக அளவில் வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்தார். வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால் ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள் என சொல்லுவார்கள். ஆனால் பீகார் தேர்தலை பொறுத்தவரை மக்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவு மனப்பான்மையில் இருக்கிறார்கள். அது தேர்தல் முடிவில் நன்றாக தெரிகிறது என்றார்.

மக்களின் ஆதரவு அதிகரிப்பு

மேலும் பேசிய அவர், பொதுவாக தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரித்தால், அது ஆட்சிக்கு எதிரான மனநிலையைக் காட்டுவதாக சிலர் கூறுவார்கள். ஆனால் பீகாரில் இந்த தேர்தல் அதற்கு மாறான ஒரு செய்தியை வெளிப்படுத்தியதாக வானதி சீனிவாசன் கூறினார். இது மக்கள் ஆதரவை பிரதிபலிப்பதாக விளக்கினார். மேலும் பேசிய அவர்,  பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்பாடுகள், அந்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சிகள் ஆகியவை நல்லபடி சென்றடைந்துள்ளன.

இதையும் படிக்க : கரூர் வழக்கு… மின் தடை ஏற்படுத்தப்பட்டதா? மின்வாரிய ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை

தமிழகத்திற்கு காத்திருக்கும் செய்தி

பீகார் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் முயற்சியில் மக்களே இணைந்து செயல்படத் தேர்வு செய்துள்ளனர். குறிப்பாக பெண்கள், பிரதமர் நரேந்திர மோடி மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், பாதுகாப்பான வாழ்க்கை மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் காரணமாக அதிக அளவில் வாக்களித்துள்ளனர். பீகார் ஒரு பின்தங்கிய மாநிலம் என்ற பிம்பத்தை மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

மேலும், பீகாரில் இளைஞர்கள் தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள் போன்றவற்றை எதிர்பார்த்து வாக்களித்துள்ளதாகவும், அவற்றை நிறைவேற்றும் திறன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே உள்ளதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் வரவிருப்பதை குறிப்பிட்ட வானதி சீனிவாசன், பீகார் தேர்தல் முடிவு இந்த மாநில தேர்தல்களில் பெரிய செய்தியாக அமையும் என நம்புவதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க : தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை!

பீகாரில் உள்ள 243 இடங்களில் 200 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சி அமைக்கத் தயாராக இருப்பதாகத் கூறப்படுகிறது. இந்த நிலையில் பீகாரில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி வெற்றிபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 14, 2025 இன்று மாலை நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.