IPL 2026: கடைசி லீக்கில் கொல்கத்தா தோல்வி.. வெற்றியுடன் பயணத்தை முடித்த டெல்லி!
KKR vs DC Highlights: ஐபிஎல் 2026 சீசனின் 70வது மற்றும் கடைசி லீக் போட்டியில் இன்று அதாவது 2026 மே 24ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) 70வது மற்றும் கடைசி லீக் போட்டியில் இன்று அதாவது 2026 மே 24ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணிக்காக லுங்கி என்கிடி மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரு அணிகளும் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டதால், பிளேஆஃப் சுற்றுகளைப் பொறுத்தவரை இந்தப் போட்டி முக்கியத்துவம் அற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பிளேஆஃப் போட்டிகள் மே 26-ஆம் தேதி தொடங்கும்.
ALSO READ: குவாலிஃபையர் 1ல் மழை எச்சரிக்கை.. மோதும் பெங்களூரு – குஜராத்.. யாருக்கு சாதகம்?
இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அந்த முடிவு ஒரு தவறான முடிவாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்காக கே.எல். ராகுல், 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களின் உதவியுடன் 30 பந்துகளில் 60 ரன்கள் எடுக்க, அபிஷேக் போரெல் 22 ரன்களும், சாஹிர் பராக் 24 ரன்களும், கேப்டன் அக்சர் படேல் 39 ரன்களும், டேவிட் மில்லர் 28 ரன்களும், அஷுதோஷ் சர்மா 18 ரன்களும் எடுத்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது கணக்கைத் தொடங்காமல் களத்தில் இருந்தார். 50 ரன் பார்ட்னர்ஷிப் இல்லாமல் டெல்லி அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறையாகும்.
சேஸிங்கில் கேகேஆர் தோல்வி:
A roaring sign-off at Eden. 💙❤️ pic.twitter.com/JUkELIQvwZ
— Delhi Capitals (@DelhiCapitals) May 24, 2026
இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, 39 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களின் உதவியுடன் 63 ரன்கள் குவித்து அதிகபட்ச இன்னிங்ஸ் ஆடினார். மற்ற பேட்ஸ்மேன்களும் சொதப்பினார்கள். ஃபின் ஆலன் 20 ரன்களும், மனிஷ் பாண்டே 25 ரன்களும், கேமரூன் கிரீன் 02 ரன்களும், தஜஸ்வி தஹியா 01 ரன்னும், அனுகுல் ராய் 09 ரன்களும், வருண் சக்கரவர்த்தி 05 ரன்களும், சௌரப் துபே 04* ரன்களும் எடுத்தனர்.
ALSO READ: மும்பையை வீழ்த்தி ராஜநடை.. பிளே ஆஃப்க்குள் அடியெடுத்து வைத்த ராஜஸ்தான்..!
ரிங்கு சிங்கும் கார்த்திக் தியாகியும் ரன் ஏதும் எடுக்காமல் திரும்பினர். இதையடுத்து, 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.