IPL 2026: பிளே ஆஃப்க்கு கேகேஆர் தகுதி பெற வேண்டுமா..? எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி தேவை..?
KKR Playoff Equation: ராஜஸ்தான் தோற்றால், கொல்கத்தா அணிக்கு பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பு கிடைக்கும். வெற்றி பெறுவதோடு, 4வது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியை முந்துவதற்கு ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது நிகர ரன் ரேட்டையும் மேம்படுத்த வேண்டும். அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஓவர்களில் இலக்கை விரட்டிப் பிடிக்க வேண்டும்.
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) கடைசி லீக் போட்டியில் இன்று அதாவது 2026 மே 24ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக, தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் தோற்றால், கொல்கத்தா அணிக்கு பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பு கிடைக்கும். வெற்றி பெறுவதோடு, 4வது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியை முந்துவதற்கு ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது நிகர ரன் ரேட்டையும் மேம்படுத்த வேண்டும். அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஓவர்களில் இலக்கை விரட்டிப் பிடிக்க வேண்டும். எனவே, கேகேஆர் அணியின் தகுதிபெறும் சமன்பாட்டை அறிந்து கொள்வோம்.
ALSO READ: ராஜஸ்தானுக்கு வில்லனாக வரும் மழை.. பிளே ஆஃப்க்கு செல்லுமா..? சமன்பாடு என்ன?
தகுதிபெற (முதலில் பந்துவீசி) கேகேஆர் அணி எத்தனை ஓவர்களைத் துரத்த வேண்டும்?
- முதலில் பேட்டிங் செய்யும் டெல்லி 180 ரன்கள் எடுத்தால், கொல்கத்தா இந்த இலக்கை 12 முதல் 12.4 ஓவர்களுக்குள் துரத்திப் பிடிக்க வேண்டும்.
- முதலில் பேட்டிங் செய்யும் டெல்லி 200 ரன்கள் எடுத்தால், பிளேஆஃப்களுக்குத் தகுதிபெற கேகேஆர் அணி 12.1 முதல் 12.4 ஓவர்களுக்குள் இலக்கைத் துரத்திப் பிடிக்க வேண்டும்.
முதலில் பேட்டிங் செய்யும் கேகேஆர் அணி எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்?
- கொல்கத்தா அணி முதலில் பேட் செய்து 200 ரன்கள் எடுத்தால், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற குறைந்தபட்சம் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
- கேகேஆர் 225 ரன்கள் எடுத்தால், டெல்லிக்கு எதிராக 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 180 ரன்கள் என்ற மொத்த ஸ்கோருடன், கொல்கத்தா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
ALSO READ: வெளியேறிய டெல்லி.. ஒரு இடத்திற்கு 3 அணிகள்.. RR, KKR, PBKS பிளே ஆஃப் கணக்குகள்..!




புள்ளி அட்டவணையில் கொல்கத்தாவின் நிலை:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 புள்ளிகளுடனும், +0.011 நிகர ரன் ரேட்டுடனும் புள்ளி அட்டவணையில் 6வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் தற்போது 13 புள்ளிகளுடனும், +0.309 நிகர ரன் ரேட்டுடனும் 4வது இடத்தில் உள்ளது. எனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றால் பஞ்சாபின் நிகர ரன் ரேட்டை மிஞ்ச வேண்டும். எனவே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறுமா இல்லையா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.