AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ICC Womens T20 WC 2026: 12 அணிகள்.. 33 போட்டிகள்.. 2026 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான முழு அட்டவணை!

ICC Womens T20 World Cup Full Schedule: 2026 டி20 மகளிர் உலகக் கோப்பை போட்டிகளின் நேரமான 3 வெவ்வேறு நேரங்களில் நடைபெறும். மிகக் குறைந்த நேரத்தில் அதிகப் போட்டிகளை நடத்தி முடிக்கும் வகையில், குழுநிலைப் போட்டிகளுக்கு 3 நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அரையிறுதிப் போட்டிகள் வெவ்வேறு நாட்களில் ஒரே நேரத்தில் நடைபெறும்.

ICC Womens T20 WC 2026: 12 அணிகள்.. 33 போட்டிகள்.. 2026 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான முழு அட்டவணை!
12 அணியின் கேப்டன்கள்Image Source: ICC/Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Jun 2026 17:37 PM IST

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 (2026 T20 Womens World Cup) இங்கிலாந்தில் வருகின்ற 2026 ஜூன் 12ம் தேதி முதல் 2026 ஜூலை 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முறை, அதிகபட்சமாக 12 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. அதிக அணிகளின் அதிக போட்டிகளைக் காண வாய்ப்பு இருப்பதால், இது முன்பை விட போட்டிகளின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். இந்திய அணி (Indian Womens Team) உட்பட அனைத்து அணிகளின் போட்டிகளும் எப்போது, ​​எங்கே நடைபெறும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம். இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இந்தத் தொடரில் மொத்தம் 33 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த 12 போட்டிகளும், தொடரை நடத்தும் இங்கிலாந்தில் உள்ள ஏழு மைதானங்களில் நடைபெறும்.

2026 டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் 12 அணிகளும் தலா 6 அணிகள் கொண்ட 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுடன் ‘ஏ’ குழுவிலும், நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி ‘பி’ குழுவிலும் இடம்பெற்றுள்ளன.

ALSO READ: டி20 உலகக் கோப்பையில் எதிர்பார்ப்பை தூண்டும் இந்தியா – பாகிஸ்தான்.. எப்போது நடைபெறுகிறது?

டி20 உலகக் கோப்பை குழுக்கள்

  • குழு A: இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நெதர்லாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா
  • குழு B: இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்

டி20 உலகக் கோப்பை நடைபெறும் இடங்கள்

  • எட்ஜ்பாஸ்டன் (பர்மிங்ஹாம்)
  • ஓல்ட் டிராஃபோர்ட் (மான்செஸ்டர்)
  • ஹாம்ப்ஷயர் பவுல் (சவுத்தாம்ப்டன்)
  • ஹெடிங்லி (லீட்ஸ்)
  • பிரிஸ்டல் கவுண்டி மைதானம் (பிரிஸ்டல்)
  • லார்ட்ஸ் (லண்டன்)
  • தி ஓவல் (லண்டன்)

ஒரே நாளில் 3 போட்டிகள்:

2026 டி20 மகளிர் உலகக் கோப்பை போட்டிகளின் நேரமான 3 வெவ்வேறு நேரங்களில் நடைபெறும். மிகக் குறைந்த நேரத்தில் அதிகப் போட்டிகளை நடத்தி முடிக்கும் வகையில், குழுநிலைப் போட்டிகளுக்கு 3 நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அரையிறுதிப் போட்டிகள் வெவ்வேறு நாட்களில் ஒரே நேரத்தில் நடைபெறும்.

ALSO READ: இரவு 11 மணிக்கு இந்தியா – இங்கிலாந்து டி20 தொடரா..? முக்கிய முடிவை எடுத்த கிரிக்கெட் வாரியம்!

டி20 உலகக் கோப்பையின் முழுமையான அட்டவணை

  • 2026 ஜூன் 12: இங்கிலாந்து – இலங்கை, எட்ஜ்பாஸ்டன் (பர்மிங்ஹாம்) – இரவு 11:00 மணி
  • 2026 ஜூன் 13: ஸ்காட்லாந்து – அயர்லாந்து போட்டி, ஓல்ட் டிராஃபோர்ட் (மான்செஸ்டர்) பிற்பகல் 3:00 மணி, ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா போட்டி, ஓல்ட் டிராஃபோர்ட் (மான்செஸ்டர்) இரவு 7:00 மணி, வெஸ்ட் இண்டீஸ் – நியூசிலாந்து போட்டி, ஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டன், இரவு 11:00 மணி
  • 2026 ஜூன் 14: வங்கதேசம் – நெதர்லாந்து போட்டி, எட்ஜ்பாஸ்டன் (பர்மிங்ஹாம்) பிற்பகல் 3:00 மணி, இந்தியா – பாகிஸ்தான் போட்டி, எட்ஜ்பாஸ்டன் (பர்மிங்ஹாம்), இரவு 7:00 மணி
  • 2026 ஜூன் 16: நியூசிலாந்து – இலங்கை போட்டி, ஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டன், இரவு 7:00 மணி, இங்கிலாந்து – அயர்லாந்து போட்டி, ஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டன், இரவு 11:00 மணி
  • 2026 ஜூன் 17: ஆஸ்திரேலியா – வங்கதேசம் போட்டி, ஹெடிங்லி (லீட்ஸ்) மைதானத்தில், பிற்பகல் 3:00 மணி, இந்தியா – நெதர்லாந்து போட்டி, ஹெடிங்லி (லீட்ஸ்) இரவு 7:00 மணி, தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் போட்டி, எட்ஜ்பாஸ்டன் (பர்மிங்ஹாம்), இரவு 11:00 மணி
  • 2026 ஜூன் 18: வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து போட்டி, ஹெடிங்லி (லீட்ஸ்) இரவு 11:00 மணி
  • 2026 ஜூன் 19: நியூசிலாந்து – அயர்லாந்து போட்டி, ஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டன், இரவு 11:00 மணி
  • 2026 ஜூன் 20: ஆஸ்திரேலியா – நெதர்லாந்து போட்டி, ஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டன், பிற்பகல் 3:00 மணி, பாகிஸ்தான் – வங்கதேசம் போட்டி, ஹாம்ப்ஷயர் பவுல், சவுத்தாம்ப்டன், இரவு 7:00 மணி, இங்கிலாந்து – ஸ்காட்லாந்து போட்டி, ஹெடிங்லி (லீட்ஸ்) இரவு 11:00 மணி
  • 2026 ஜூன் 21: வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை, பிரிஸ்டல் கவுண்டி மைதானம் (பிரிஸ்டல்) பிற்பகல் 3:00 மணி, தென்னாப்பிரிக்கா – இந்தியா போட்டி, ஓல்ட் டிராஃபோர்ட் (மான்செஸ்டர்) இரவு 7:00 மணி
  • 2026 ஜூன் 23: நியூசிலாந்து vs ஸ்காட்லாந்து, பிரிஸ்டல் கவுண்டி மைதானம் (பிரிஸ்டல்) பிற்பகல் 3:00 மணி, இலங்கை – அயர்லாந்து போட்டி, பிரிஸ்டல் கவுண்டி மைதானம் (பிரிஸ்டல்) இரவு 7:00 மணி, ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் போட்டி, ஹெடிங்லி (லீட்ஸ்) இரவு 11:00 மணிக்கு
  • 2026 ஜூன் 24: இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ், லார்ட்ஸ், லண்டன், இரவு 11:00 மணி
  • 2026 ஜூன் 25: இந்தியா – வங்கதேசம், ஓல்ட் டிராஃபோர்ட் (மான்செஸ்டர்) இரவு 7:00 மணி, தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து போட்டி, பிரிஸ்டல் கவுண்டி மைதானம் (பிரிஸ்டல்) இரவு 11:00 மணி
  • 2026 ஜூன் 26: இலங்கை – ஸ்காட்லாந்து போட்டி, ஓல்ட் டிராஃபோர்ட் (மான்செஸ்டர்) இரவு 11:00 மணி
  • 2026 ஜூன் 27: பாகிஸ்தான் – நெதர்லாந்து போட்டி, பிரிஸ்டல் கவுண்டி மைதானம் (பிரிஸ்டல்) பிற்பகல் 3:00 மணி, வெஸ்ட் இண்டீஸ் vs அயர்லாந்து, பிரிஸ்டல் கவுண்டி மைதானம் (பிரிஸ்டல்) இரவு 7:00 மணி, இங்கிலாந்து – நியூசிலாந்து போட்டி, ஓவல், லண்டன், இரவு 11:00 மணி
  • 2026 ஜூன் 28: தென்னாப்பிரிக்கா – வங்கதேசம், லார்ட்ஸ் (லண்டன்), பிற்பகல் 3:00 மணி, ஆஸ்திரேலியா – இந்தியா, லார்ட்ஸ் (லண்டன்) மாலை 7:00 மணி
  • 2026 ஜூன் 30: அரையிறுதி 1 (குழு A வெற்றியாளர் எதிர் குழு B இரண்டாம் இடம்), தி ஓவல் (லண்டன்) இரவு 7:00 மணி
  • 2026 ஜூலை 2: அரையிறுதி 2 (குழு B வெற்றியாளர் vs குழு A இரண்டாம் இடம்), தி ஓவல் (லண்டன்) இரவு 11:00 மணி
  • 2026 ஜூலை 5: இறுதிப் போட்டி, (அரை இறுதி 1 மற்றும் அரை இறுதி 2 மோதல்), லார்ட்ஸ் (லண்டன்) மைதானத்தில் இரவு 7:00 மணி

Follow Us