Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட் – இந்தியா புதிய சாதனை – இதன் சிறப்பம்சங்கள் என்ன?

LVM3-M5 Launch: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நவம்பர் 2, 2025 அன்று தனது மிகப்பெரிய ராக்கெட் என அழைக்கப்படும் ‘பாகுபலி’ LVM3-M5-ஐ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதன் மூலம் 4,410 கிலோ எடையுள்ள இந்தியாவின் மிகப்பெரிய தொடர்பு செயற்கைக்கோள் GSAT-7R விண்ணில் செலுத்தப்பட்டது. 

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட் – இந்தியா புதிய சாதனை – இதன் சிறப்பம்சங்கள் என்ன?
LVM3-M5 Launch
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 02 Nov 2025 18:41 PM IST

ஸ்ரீஹரிகோட்டா, நவம்பர் 2: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO) நவம்பர் 2, 2025 அன்று தனது பாகுபலி ராக்கெட் என அழைக்கப்படும்பாகுபலிLVM3-M5- வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதன் மூலம் 4,410 கிலோ எடையுள்ள இந்தியாவின் மிகப்பெரிய தொடர்பு செயற்கைக்கோள் GSAT-7R விண்ணில் செலுத்தப்பட்டது.   இந்த முயற்சி இந்திய கடற்படையின் தகவல் தொடர்பு மற்றும் கடல் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  LVM3 (Launch Vehicle Mark-3) எனப்படும் இந்த ராக்கெட், இஸ்ரோ சொந்தமாக உருவாக்கிய, மூன்று நிலைகள் கொண்ட புதிய தலைமுறை ஏவுகணையாகும்.  இதில் இரண்டு S200 எனப்படும் திட எரிபொருள் ராக்கெட்டுகள், ஒரு L110 எனப்படும் திரவ எரிபொருள் மைய நிலை, மற்றும் ஒரு C25 எனப்படும் க்ரையோஜெனிக் (மிகக் குளிர்ச்சியான எரிபொருள்) நிலை ஆகியவை உள்ளன.

கடற்படைக்கான புதிய சக்தி

இந்த ராக்கெட் 4,000 கிலோ வரை உள்ள செயற்கைக்கோள்களை Geosynchronous Transfer Orbit (GTO) எனப்படும் நிலைக்கு செலுத்தும் திறன் கொண்டது.  மேலும், பூமியின் தாழ்வு பகுதிகளுக்கு பகுதிக்கு 8,000 கிலோ எடையுள்ள பொருட்களை அனுப்பும் சக்தியையும் கொண்டுள்ளது. GSAT-7R என்பது இந்திய கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட மிக முன்னேறிய தொடர்பு செயற்கைக்கோளாகும். இது முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஒரு ராக்கெட்டாகும். 

இதையும் படிக்க : இந்தியாவின் ‘பாகுபலி’.. இன்று விண்ணில் பாயும் எல்.வி.எம் – எம்5 ராக்கெட்.. சிறப்பம்சம் என்ன?

மத்திய விண்வெளித்துறை அமைச்சரின் பதிவு

 

இது விண்வெளி, நீர்மூழ்கிக் கப்பல் ஆகிய அனைத்து தளங்களிலும் கடற்படையின் தொலைத் தொடர்பை ஒருங்கிணைத்து, முழுமையான பாதுகாப்பு மற்றும் தொடர்பு எல்லைகளை விரிவுபடுத்தும் என கூறப்படுகிறது.  இதில் உள்ள செயற்கைக்கோள் பல துறைகளில் பயன்படும். குறிப்பாக அதிவேக தொலைபேசி தொடர்பு, டேட்டா மற்றும் வீடியோ தொடர்பு ஆகிய வசதிகளை வழங்கும். 

இந்த பாகுபலி ராக்கெட்டின் சிறப்பம்சங்கள்

கடற்படையின் கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் இடையே பாதுகாப்பான இணைப்பை ஏற்படுத்தும். கடல் பரப்பில் நேரடி தகவல் பரிமாற்றம் மற்றும் கண்காணிப்பு வசதிகளை அளித்து,  கடல் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் மேரிடைம் டொமைன் அவேர்னஸ்  வலிமையை அதிகரிக்கும்.

இதையும் படிக்க : இந்த வகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை.. டெல்லி அரசு எடுத்த முடிவு!

LVM3 ராக்கெட்டின் இது 5வது வெற்றிகரமான பயணம் இது.  இஸ்ரோவின் சொந்த க்ரையோஜெனிக் தொழில்நுட்பம் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ககயான் மனிதர் ஏவல் திட்டத்திற்காக பயன்படுத்தப்படவிருந்த ராக்கெட்டின் மேம்பட்ட வடிவமாகும். இந்த மிஷன் மூலம் இந்தியா தனது விண்வெளி துறையில் ஒரு பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கடற்படையின் தொடர்பு மற்றும் பாதுகாப்பை பொறுத்த வரை இந்த GSAT-7R செயற்கைக்கோள் ஒரு முக்கிய சக்தியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.