Brain Stroke: மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயம் யாருக்கு அதிகம்? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

Brain stroke Symptoms: மூளையில் ஒரு நரம்பு அடைப்பு அல்லது வெடிப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் நின்று, மூளை செல்களை சேதப்படுத்தும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் மற்றும் இரத்தம் கிடைக்காதபோது, ​​அதன் செல்கள் சில நிமிடங்களில் இறக்கத் தொடங்குகின்றன. இந்த நிலை பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.

Brain Stroke: மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயம் யாருக்கு அதிகம்? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

மூளை பக்கவாதம்

Published: 

12 Nov 2025 16:08 PM

 IST

மூளை பக்கவாதம் (Brain Stroke) என்பது ஒரு தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான பிரச்சனையாகும். சமீப காலமாக இளைஞர்களிடம் கூட இந்த பிரச்சனை அதிகளவில் காணப்படுகிறது. மூளைக்கு இரத்த விநியோகம் துண்டிக்கப்படும்போது அல்லது இரத்த நாளம் (Blood Vessel) உடைந்து போகும்போது மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. இதனால் மூளை செல்கள் இறந்து, உடலின் பல்வேறு பாகங்கள் செயலிழக்க தொடங்குகின்றன. கடந்த 2022ம் ஆண்டில் உலகளவில் 12.2 மில்லியனுக்கும் அதிகமான பக்கவாத வழக்குகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. உலகளவில், 25 வயதுக்கு மேற்பட்ட 4 பேரில் ஒருவருக்கு தங்கள் வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.85 பக்கவாதம் ஏற்படுவதாகவும், ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒருவர் பக்கவாதத்தால் இறக்கிறார்கள் என்றும் தெரிவித்தது. இந்தநிலையில், மூளை பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது..? இது ஏற்படுவதற்கு முன்பு ஏற்படும் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மாரடைப்பின் முதல் அறிகுறி இதுதானா..? உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது!

மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன..?

இரத்தக் கட்டிகள், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, மோசமான வாழ்க்கை முறை ஆகியவற்றால் பக்கவாதம் ஏற்படலாம். இதுமட்டுமின்றி புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை பக்கவாத அபாயத்தை அதிகரிக்கின்றன.

மூளையில் ஒரு நரம்பு அடைப்பு அல்லது வெடிப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் நின்று, மூளை செல்களை சேதப்படுத்தும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு போதுமான ஆக்ஸிஜன் மற்றும் இரத்தம் கிடைக்காதபோது, ​​அதன் செல்கள் சில நிமிடங்களில் இறக்கத் தொடங்குகின்றன. இந்த நிலை பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது. சரியான நேரத்தில் அடையாளம் காணப்படாவிட்டால், மரணத்திற்கு வழிவகுக்கும். பக்கவாதத்தின் அறிகுறிகள் திடீரெனவும் கடுமையானதாகவும் இருக்கும், ஆனால் சில ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவதன் மூலம் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையைத் தடுக்க உதவும்.

ஆரம்ப அறிகுறிகள்:

  • கைகள், கால்கள், முகத்தில் திடீரென உணர்வின்மை அல்லது பலவீனம்
  • பேசுவதில் சிரமம்
  • மங்கலான பார்வை
  • தலைச்சுற்றல்
    சில நேரங்களில் தலைவலி

இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு பிறகு, மூளை செல்கள் சில நிமிடங்களில் இறக்கத் தொடங்குகின்றன. இது கோமா, பேச்சு பிரச்சினைகள், நினைவாற்றல் இழப்பு மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் 3 முதல் 3 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இறப்பு ஆபத்து அதிகரிக்கிறது. மூளையில் இரத்தப்போக்கு ஏற்படுவதும் மிகவும் ஆபத்தானது. சில நேரங்களில் மீண்டும் மீண்டும் பக்கவாதம் ஏற்படும். எனவே அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது.

ALSO READ: வயிற்றை அழுத்தி தூங்குவது நல்லதா..? உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?

பக்கவாதத்தைக் கண்டறிவதற்கான சூத்திரம்:

மூளைப் பக்கவாதத்தின் அறிகுறிகளை அடையாளம் காண்பதற்கான ஒரு சூத்திரம் உள்ளது. இதன் மூலம் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். இந்த நான்கு விஷயங்களை உடனடியாக தெரிந்து கொள்வோம்.

  1. F (முகம் தொங்குதல்): முகம் ஒரு பக்கமாக இழுக்கிறதா..?
  2. A (கை பலவீனம்): ஒரு கை பலவீனமாக உள்ளதா அல்லது கைகளில் உணர்ச்சி இல்லையா..?
  3. S (பேச்சு சிரமம்): உங்களுக்கு பேசும்போது தெளிவாக பேச்சு வெளிப்படவில்லையா..?
  4. T அவசரநிலையை அழைக்க வேண்டிய நேரம் இது.