Entertainment News Live Updates: ஓடிடியில் வெளியான டிஎன்ஏ படம்!
Entertainment News in Tamil, 20 July 2025, Live Updates: தனுஷின் குபேரா படம் மட்டுமின்றி, நடிகர் அதர்வாவின் டிஎன்ஏ படமும் ஓடிடியில் வெளியானது . இந்தப் படத்தைத் தமிழ் பிரபல இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது

LIVE NEWS & UPDATES
-
இலங்கை அமைச்சரை சந்தித்த ரவி மோகன்
ரவி மோகன் – கெனிஷா ஜோடி இலங்கை சென்றுள்ளனர். ஆல்பம் தொடர்பான இந்த பயணத்தின் போது இலங்கை அமைச்சரை சந்தித்து சுற்றுலாத்துறை வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
-
நடிகை மகாலட்சுமி இன்ஸ்டா பதிவு
தயாரிப்பாளர் ரவீந்தர் – மகாலட்சுமி தொடர்பான வதந்திகள் இணையத்தில் வைரலாகின் வரும் நிலையி, நாங்கள் ஆரோக்கியமாகவும், பாசிட்டிவாகவு, மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம் என்றும், விவரம் எதுவும் தெரியாமல் முடிவு செய்யாதீர்கள் என்றும் நடிகை மகாலட்சுமி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
-
DNA OTT : ஹாட் ஸ்டாரில் வெளியான டிஎன்ஏ படம்
கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியான டிஎன்ஏ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படமானது வெளியாகி சுமார் 4 வாரங்ககளை கடந்த நிலையில், ஜூலை 19ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
-
அரசியல் மற்றும் ஆக்ஷ்ன் திரில்லரின் வெற்றி
குபேரா படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்திருந்தார். நாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜுனா நடிக்க, இந்த படமானது அரசியல் மற்றும் ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகி வரவேற்பை பெற்றது
-
Kuberaa OTT : ஓடிடியில் வரவேற்பை பெறும் குபேரா
தனுஷின் குபேரா படம் வெளியாகி 1 மாதமான நிலையில், ஓடிடியில் தற்போது வெளியாகியுள்ளது. அமேசான் ப்ரைம் வீடியோவில் கடந்த 2025, ஜூலை 18ம் தேதி முதல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது
-
10 வருடத்திற்கு பிறகு இயக்குநர்
எஸ்ஜே சூர்யா, இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் இசை. கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படத்திற்குப் பின் சுமார் 10 வருடத்திற்கு அடுத்தாக மீண்டும் படத்தை இயக்கவுள்ளார். அதுதான் கில்லர்
-
ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி
இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவே கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் கிஸ் மற்றும் அயோத்தி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
-
Killer First Look : கில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்!
நடிப்பில் கவனம் செலுத்தி வந்த எஸ்ஜே சூர்யா, சுமார் 10 வருடங்களுக்குப் பின் மீண்டும் படங்களை இயக்க ஆரம்பித்துள்ளார். தற்போது கில்லர் என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
EN ANBUM AARUYIRUMAANA Fans & Friends 🥰🥰🥰💐💐💐Presenting U the #KillerFirstLook as My Birthday gift to all of U 🥰🥰🥰, Tomorrow Morning all of U keep me in your prayers🙏🙏🙏and I will keep U all in my prayers as always 😍😍😍🙏🙏🙏🥰sjs @arrahman@GokulamGopalan… pic.twitter.com/t1UChrRNhe
— S J Suryah (@iam_SJSuryah) July 19, 2025
-
கிளைமேக்ஸை மாற்றும் ஏஐ!
இந்த கிளைமேக்ஸ் மாற்றம் என்பது ஏஐ உதவியுடன் செய்யப்படவுள்ளது. இதுவரை வெளியான ரீரிலீஸ் படங்களில் ஏஐ மூலம் கிளைமேக்ஸ் மாற்றப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இதனை இயக்குநர் ஆனந்த் எல் .ராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
-
பாசிட்டிவான கிளைமேக்ஸுடன் ரீரிலீஸ்
ராஞ்சனாவின் தமிழ் வெர்ஷனான அம்பிகாவதி விரைவில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. ஆனால் இந்த முறை மாறுபட்ட கிளைமேக்ஸ் காட்சியுடன் வெளியாகவிருக்கிறது. பாசிட்டிவான கிளைமேக்ஸுடன் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது
-
Dhanush Movie : தனுஷின் ராஞ்சனா பட கிளைமேக்ஸ் மாற்றம்
தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் தனுஷின் ராஞ்சனா. இப்படம் 2013ம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது ஏஐ மூலம் கிளைமேக்ஸ் மாற்றப்பட உள்ளது.
நடிகர் அஜித் குமார் மற்றும் அதிக ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வெற்றிபெற்ற திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படமானது வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தை அடுத்ததாக மீண்டும் அஜித் குமார் (Ajithkumar) இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது, கிட்டத்தட்ட அந்த தகவல் உறுதியாகியுள்ளது. இதுதான் கோலிவுட்டின் முக்கிய செய்தியாக உள்ளது. அதுபோக ரஜினியின் (Rajinikanth) கூலி படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இது வீக்கெண்ட் என்பதால் மக்கள் ஓடிடி பக்கம் கவனத்தை திருப்புவார்கள். அவர்களுக்கு ஏதுவாக புதுப்படங்கள் சில ஓடிடியில் வெளியாகியுள்ளன. தனுஷ் நடித்த குபேரா படம், அதர்வாவின் டிஎன் ஏ படம் என முக்கிய படங்கள் ஓடிடியில் களம் இறங்கியுள்ளன. இன்னும் பல முக்கிய அப்டேட்கள் தமிழ் சினிமாவில் வந்த வண்ணம் உள்ளன. அவற்றை உடனுக்குடன் பார்க்கலாம்.
உலக நாடுகளிலும் தங்களது திறமையை கோலிவுட் நடிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகளவில் தமிழ் சினிமாவை “Kollywood” என்றழைப்பது வழக்கமாகியுள்ளது. இந்திய சினிமாவில் ஹிந்தி படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்ப்படங்களுக்கே உலகளவில் அதிக ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இதனால், தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் ஒரு தனித்துவமான அடையாளம் உருவாகியுள்ளது.
Published On - Jul 20,2025 7:56 AM