Kuberaa : பேக் டூ பேக் அப்டேட்.. தனுஷின் குபேரா படத்தின் ‘3வது சிங்கிள்’ எப்போது ரிலீஸ் தெரியுமா?
Kuberaa 3rd Single Update : தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள பான் இந்தியத் திரைப்படம்தான் குபேரா. இப்படத்தில் முக்கிய நடிகர்களாக தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியான நிலையில், மூன்றாவது பாடலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பான் இந்திய சினிமா நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இறுதியாக ராயன் (Raayan) படம் தமிழில் வெளியானது. இதைத் தொடர்ந்து தமிழில் மட்டும் இவரின் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை (Idly Kadai) போன்ற படங்கள் உருவாகிவந்தது. இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ரிலீசாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இவரின் இயக்கத்திலும் , நடிப்பிலும் உருவாகிவரும் படம் இட்லி கடை. இப்படம் வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகிறது. இந்த படத்திற்கு முன் இவரின் நடிப்பில் ரிலீஸிற்கு காத்திருக்கும் படம் குபேரா (Kuberaa). இந்த படத்தினை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷுடன் முன்னணி நடிகர்கள் நாகார்ஜுனா (Nagarjuna), ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), ஜிம் ஷார்ப் என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.
இந்த படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குபேரா படத்தின் நாளை 2025, ஜூன் 10ம் தேதியில் மும்பையில் நடைபெறும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இப்பாடலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.




தனுஷின் குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
The stars are set to hit the shores of Mumbai tomorrow and the coast will echo with the #Kuberaa3rdSingle 💃🏼
A Rockstar @ThisIsDSP musical 🎶#Kuberaa in cinemas June 20, 2025.#PippiPippiDumDumDum #SekharKammulasKuberaa #KuberaaOn20thJune pic.twitter.com/j3CUHxkUmm
— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 9, 2025
தனுஷின் குபேரா கதாபாத்திரம் :
தெலுங்கு மொழியை அடிப்படியாகக் கொண்டு இந்த குபேரா திரைப்படமானது உருவாகியிருக்கிறது. இந்த படத்தை டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். இப்படத்தைப் பற்றிய அறிவிப்புகள் கடந்த 2023ம் ஆண்டிலே வெளியாகியது. அதை தொடர்ந்து நடிகர் தனுஷின் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார்.
தனுஷ் தமிழில் இரு படங்களை இயங்கிவந்த நிலையில், இந்த குபேரா படத்தின் ஷூட்டிங் முடிவதற்கும் தாமதமானது. இந்த குபேரா படத்தில் தனுஷ் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். இது தொடர்பாகப் படத்தின் டீசரில் இடம்பெற்றது.
குபேராவின் கதைக்களம் எப்படி :
தனுஷின் குபேரா படமானது அரசியல் மற்றும் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. அரசியல் மற்றும் பணம் சார்ந்த கதைக்களத்துடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் கதையைப் பற்றி இயக்குநர் சேகர் கம்முலாவே கூறியிருந்தார், இந்த குபேரா அரசியல் திரில்லர் படம் என்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மொத்தத்தில் இப்படமானது ஒரு பான் இந்தியப் படமாக உருவாகியிருக்கிறது. இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தகவலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.