இந்தியாவின் முன்னணி கிரிப்டோ பரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றான காயின்டிசிஎக்ஸ் (CoinDCX), தங்களின் பிளாட்ஃபாரத்தில் ஏற்பட்ட பெரியதொரு பாதுகாப்பு குறைபாட்டால் அமெரிக்க டாலரில் 44 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 370 கோடி) இழந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தில் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் கடந்த ஜூலை 19, 2025 சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் அதன் பயனர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். இந்த நிலையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நிறுவனத்தின் விளக்கம்
CoinDCX நிறுவனத்தின் இணை நிறுவனர் சுமித் குப்தா தனது எக்ஸ் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், பயனர்கள் வாடிக்கையாளர்கள் இதுகுறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், அவர்களின் முதலீடுகள் பாதுகாப்பாகவே உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். இழப்பை நிறுவனத்தின் பேங்க் ரிசர்வ் (Treasury Reserve) மூலமாக ஈடு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதலால் யாருக்கு பாதிப்பு?
தாக்குதல் நேர்ந்தது, பணத் தேவைக்காக பயன்படுத்தப்படும் ஒரு கணக்கில் (internal operational account) தான் என்று நிறுவனம் விளக்கியுள்ளது. இது வாடிக்கையாளர் கையிருப்பு வாலட்டுகள் (Customer Wallets) உடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாதது.
சைபர் தாக்குதல் குறித்து காயின்டிசிஎக்ஸ் நிறுவனர் வெளியிட்ட வீடியோ
Hi everyone,
At @CoinDCX, we have always believed in being transparent with our community, hence I am sharing this with you directly.
Today, one of our internal operational accounts – used only for liquidity provisioning on a partner exchange – was compromised due to a… pic.twitter.com/L1kZhjKAxQ
— Sumit Gupta (CoinDCX) (@smtgpt) July 19, 2025
இதையும் படிக்க: வாகனம் திருடப்பட்டால் இந்த தவறை செய்யாதீர்கள் – காப்பீடு இருந்தாலும் இழப்பீடு கிடைக்காது!
தாக்குதல் நடத்தப்பட்டவுடன் தற்காலிகமாக CoinDCX Web3 பரிமாற்ற சேவை நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் வாடிக்கையாளர்களின் கணக்குக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்ததும் தற்போது மீண்டும் செயல்பாட்டில் வந்துவிட்டது. மேலும் வாடிக்கையாளர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் பணத்தை திரும்ப பெறும் நடைமுறையும் செயல்பாட்டில் உள்ளது.
இதுகுறித்து சுமித் குப்தா மேலும் கூறியதாவது, “பதற்றத்தில் உங்கள் கிரிப்டோ சொத்துகளை விற்க வேண்டாம். இது அதிக இழப்புகளுக்கு வழிவகுக்கும். சந்தையை அமைதியாக இருக்க விடுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள் என்று அவர் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையும் படிக்க: கிரெடிட் கார்டு பயனர் உயிரிழந்துவிட்டால் கடனை யார் திருப்பி செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இழந்த பணத்தை மீட்கும் முயற்சியில் காயின்டிசிஎக்ஸ் நிறுவனம்
CoinDCX நிறுவனம் தனது உள் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு குழு மூலம் முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து சைபர் தாக்குதல் குறித்து விசாரணையில் இறங்கியுள்ளது. மேலும் அவர்களுடன் இணைந்து இழந்த பணத்தை மீட்டெடுக்கும் முயற்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காயின்டிசிஎக்ஸ் நிறுவன்ததில் ஏற்பட்ட சைபர் தாக்குதல் பயனர்களின் பணத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதுபடி, நாம் கிரிப்டோ சொத்துக்களை விற்க வேண்டியதில்லை. ஏனெனில் அவசரமாக விற்கும்போது அதன் உண்மையான மதிப்புக்கு விலை கிடைக்காது. எனவே நம்பிக்கையுடன் காத்திருப்பது நல்லது.